இலங்கை இளையோர் அணிக்காக அரைச்சதம் விளாசிய தினுர கலுப்பான

124

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகள் இடையிலான இளையோர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில், இலங்கை அணி தினுர கலுப்பானவின் அரைச்சதத்தோடு வலுப் பெற்றுள்ளது.  

அபாரதங்களைப் பெறும் வனிந்து ஹஸரங்க, பினுர பெர்னாண்டோ

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை 19 வயதின் கீழ் அணியானது அங்கே நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரினை அடுத்து தற்போது இரு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கின்றது 

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (08) வோர்ம்ஸ்லி நகரில் ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து இளம் வீரர்கள், இலங்கையினை முதலில் துடுப்பாடப் பணித்தனர் 

அதன்படி மழையின் தாக்கம் அதிகம் காணப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் 42.4 ஓவர்களே வீச முடியுமாக இருந்ததோடு, இந்த ஓவர்கள் அனைத்தினையும் எதிர்கொண்ட இலங்கை வீரர்கள் முதல் நாள் நிறைவில் 177 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றனர் 

இலங்கை சார்பில் அதன் தலைவர் தினுர கலுப்பான 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்பட, AM பிரன்ச் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

போட்டியின் சுருக்கம் 

 

இலங்கை U19 – 177/5 (42.4) தினுர கலுப்பான 70*, தினிரு அபேவிக்ரமசிங்க 35*, AM பிரன்ச் 56/2  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<