Home Tamil மதீஷவின் அசத்தல் பந்துவீச்சுடன் கொழும்பு ஸ்ரைக்கர்ஸிற்கு திரில் வெற்றி

மதீஷவின் அசத்தல் பந்துவீச்சுடன் கொழும்பு ஸ்ரைக்கர்ஸிற்கு திரில் வெற்றி

Lanka Premier League 2024

167
Colombo Strikers vs Kandy Falcons

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று சனிக்கிழமை (06) நடைபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி வெறும் 2 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றது. 

தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 199 ஓட்டங்களை குவித்தது. 

>> கோல் அணியில் இணையும் 2 வேகப்பந்து வீச்சாளர்கள்

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்காக ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். 

நான்காவது ஓவரின் போது இவர்கள் அரைச்சத இணைப்பாட்டத்தை கடந்த போதும், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 10 பந்துகளில் 20 ஓட்டங்களுடனும், அஞ்செலோ பெரேரா 23 பந்துகளில் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து கிளேன் பிலிப்ஸ் தனியாளாக அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 70 ஒட்டங்களை விளாசினர். இவரையடுத்து ஏனைய வீரர்கள் அதிக ஓட்ட வேகத்துடன் துடுப்பெடுத்தாடி பங்களிப்பு வழங்க, கொழும்பு அணி 199 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

கடினமான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி பல்கோன்ஸ் அணி சந்திமலின் விக்கெட்டினை இழந்த போதும், அடுத்து களமிறங்கிய வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவித்தனர். 

இதில் அன்ரே பிளச்சர் 36 பந்துகளில் 47 ஓட்டங்களையும், மொஹமட் ஹாரிஸ் 32 பந்துகளில் 56 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ்  16 பந்துகளில் 36 ஓட்டங்களையும் விளாசினார். இவர்களின் இந்த ஓட்ட குவிப்புடன் கண்டி பல்கோன்ஸ் அணி வெற்றியை நோக்கி நகர்ந்தது. 

குறிப்பாக 7 விக்கெட்டுகள் கைவசிமிருக்க கடைசி 4 ஓவர்களில் 41 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இந்த ஆடுகளத்தில் இந்த ஓட்ட எண்ணிக்கையை எட்டக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்த போதும், மதீஷ பதிரணவின் அபாரமான 17வது ஓவர் கண்டி அணிக்கு சவாலை கொடுத்தது.  

குறித்த ஓவரில் கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகிய முன்னணி வீரர்களின் விக்கெட்டினை மதீஷ பதிரண வீழ்த்தினார். இதன் பின்னர் அஞ்செலோ மெதிவ்ஸ் தனியாளாக போராட்டம் காண்பித்தார். கடைசி 2 ஓவர்களில் 23 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், மதீஷ பதிரண மீண்டும் அபாரமாக பந்துவீசி 3 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்தார். எனவே இறுதி ஓவரில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 

>> தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள ஜப்னா கிங்ஸ்

இறுதி ஓவரை திசர பெரேரா வீசி முதல் பந்தில் சதுரங்க டி சில்வாவின் விக்கெட்டினையும், இரண்டாவது பந்தில் ஒரு ஓட்டத்தினையும் விட்டுக்கொடுத்தார். இதனையடுத்து அஞ்செலோ மெதிவ்ஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியை விளாசினார். எனவே கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட, மெதிவ்ஸ் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். எனவே 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு அணி வெற்றிபெற்றது. பந்துவீச்சில் மதீஷ பதிரண 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

கொழும்பு அணி இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Kandy Falcons
197/8 (20)

Colombo Strikers
199/9 (20)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Kamindu Mendis b Shoriful Islam 20 10 0 3 200.00
Angelo Perera c Andre Fletcher b Chaturanga de Silva 38 23 3 2 165.22
Glenn Phillips c Mohammad Haris b Dushmantha Chameera 70 43 6 3 162.79
Sadeera Samarawickrama c Dasun Shanaka b Dushmantha Chameera 5 7 0 0 71.43
Dunith Wellalage lbw b Wanindu Hasaranga 6 9 0 0 66.67
Thisara Perera b Wanindu Hasaranga 6 2 0 1 300.00
Shadab Khan c & b Dasun Shanaka 23 12 2 1 191.67
Chamika Karunaratne c Dushmantha Chameera b Shoriful Islam 13 5 1 1 260.00
Shoriful Islam c Wanindu Hasaranga b Dushmantha Chameera 7 3 0 1 233.33
Matheesha Pathirana not out 2 4 0 0 50.00
Garuka Sanketh not out 1 2 0 0 50.00


Extras 8 (b 0 , lb 4 , nb 0, w 4, pen 0)
Total 199/9 (20 Overs, RR: 9.95)
Bowling O M R W Econ
Angelo Mathews 1 0 7 0 7.00
Shoriful Islam 4 0 43 2 10.75
Chaturanga de Silva 4 0 48 1 12.00
Dushmantha Chameera 4 0 40 3 10.00
Dasun Shanaka 3 0 20 1 6.67
Wanindu Hasaranga 4 0 37 2 9.25


Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal b Taskin Ahmed 12 9 0 2 133.33
Andre Fletcher c Sadeera Samarawickrama b Shadab Khan 47 36 5 2 130.56
Mohammad Haris c Sadeera Samarawickrama b Matheesha Pathirana 56 32 5 4 175.00
Kamindu Mendis c Sadeera Samarawickrama b Matheesha Pathirana 36 16 2 4 225.00
Angelo Mathews run out (Thisara Perera) 33 14 4 2 235.71
Dasun Shanaka c Shadab Khan b Matheesha Pathirana 0 2 0 0 0.00
Wanindu Hasaranga b Matheesha Pathirana 0 2 0 0 0.00
Chaturanga de Silva c Dunith Wellalage b Thisara Perera 3 8 0 0 37.50
Pavan Rathnayake not out 1 1 0 0 100.00


Extras 9 (b 0 , lb 2 , nb 0, w 7, pen 0)
Total 197/8 (20 Overs, RR: 9.85)
Bowling O M R W Econ
Taskin Ahmed 4 0 30 1 7.50
Dunith Wellalage 3 0 43 0 14.33
Garuka Sanketh 4 0 57 0 14.25
Thisara Perera 2 0 18 1 9.00
Matheesha Pathirana 4 0 26 4 6.50
Shadab Khan 3 0 21 1 7.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<