லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் இடையிலான முதல் சுற்று லீக் போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியானது 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>> அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கோல் மார்வல்ஸ்
மேலும் இந்தப் போட்டியோடு LPL T20 தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியானது தொடர் வெற்றிகளுடன் முன்னேறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கோல் மார்வல்ஸ், ஜப்னா கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. தொடரின் ஆறாவது லீக் போட்டியான இந்த மோதல் நேற்று (05) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா கிங்ஸ் வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்.
இதன்படி முதலில் துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் அணி டிம் செய்பார்ட்டின் அதிரடி சதத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்தது.
கோல் மார்வல்ஸ் தரப்பில் தன்னுடைய கன்னி LPL சதத்தினைப் பதிவு செய்த டிம் செய்பார்ட் 63 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்கள் எடுத்தார். ஜப்னா கிங்ஸ் பந்துவீச்சில் அஷ்மத்துல்லா ஒமர்சாய் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 180 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணியானது ரைலி ரூசோ மற்றும் அஷ்மத்துல்லா ஓமர்சாய் ஆகியோரது அதிரடியோடு போட்டியின் வெற்றி இலக்கினை 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களுடன் அடைந்தது.
>> WATCH – LPL வரலாற்றில் அதிவேக சதமடித்து சாதித்த குசல் பெரேரா! | LPL 2024
ஜப்னா கிங்ஸ் துடுப்பாட்டம் சார்பில் ரைலி ரூசோ 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுக்க, அஷ்மத்துல்லா ஓமர்சாய் வெறும் 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளோடு 35 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்துடன் போட்டியின் ஆட்டநாயகனாகவும் அஷ்மத்துல்லா தெரிவானார்.
ஸ்கோர் விபரம்
cURL Error #:Failed to connect to cricket-api.stats.thepapare.com port 443: Connection refused
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<