Home Tamil அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கோல் மார்வல்ஸ்

அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கோல் மார்வல்ஸ்

140
Colombo Strikers vs Galle Marvels

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2024ஆம் ஆண்டு தொடரில் கோல் மார்வல்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்  இடையிலான போட்டியில், கோல் மார்வல்ஸ் 07 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. 

மேலும் இந்த வெற்றியுடன் LPL T20 தொடரில் கோல் மார்வல்ஸ் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்து முன்னேறுகின்றது.   

>> குசலின் சதம் வீண் ; அவிஷ்கவின் அதிரடியுடன் ஜப்னாவுக்கு வெற்றி!

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ், கோல் மார்வல்ஸ் அணிகள் இடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் தொடரின் 5ஆவது மோதலாக நேற்று (02) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு வீரர்கள் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தனர் 

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது. 

கோல் மார்வல்ஸ் தரப்பில் அதன் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல வெறும் 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுக்க, பின்வரிசையில் களம் வந்த இசுரு உதான 34 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் பெற்றார் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 180 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதிலும் அதற்காக துனித் வெல்லாலகே போராடினார். இறுதியில் அவரது போராட்டம் வீணாக கொழும்பு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வியினைத் தழுவியது 

>> மேற்கிந்திய தீவுகளில் இருந்து நாடு திரும்பும் இந்திய கிரிக்கெட் அணி

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் துடுப்பாட்டம் சார்பில் துனித் வெல்லாலகே 26 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் பெற்றார் 

மறுமுனையில் கோல் மார்வல்ஸ் பந்துவீச்சு சார்பில் இசுரு உதான, மகீஷ் தீக்ஸன மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர் 

ஸ்கோர் விபரம்

Result


Colombo Strikers
172/9 (20)

Galle Marvels
179/10 (20)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Rahmanullah Gurbaz b Shadab Khan 50 18 6 3 277.78
Alex Hales c Matheesha Pathirana b Binura Fernando 14 15 2 0 93.33
Tim Seifert b Shadab Khan 12 11 2 0 109.09
Bhanuka Rajapaksa run out (Sadeera Samarawickrama) 0 1 0 0 0.00
Janith Liyanage  lbw b Shadab Khan 2 5 0 0 40.00
Sahan Arachchige c Muhammad Waseem b Matheesha Pathirana 35 27 4 1 129.63
Dwaine Pretorius lbw b Shadab Khan 5 7 1 0 71.43
Isuru Udana c Rahmanullah Gurbaz b Binura Fernando 52 34 5 3 152.94
Malsha Tharupathi run out (Sadeera Samarawickrama) 0 0 0 0 0.00
Maheesh Theekshana not out 0 1 0 0 0.00
Zahoor Khan c Muhammad Waseem b Binura Fernando 0 1 0 0 0.00


Extras 9 (b 2 , lb 0 , nb 0, w 7, pen 0)
Total 179/10 (20 Overs, RR: 8.95)
Bowling O M R W Econ
Thisara Perera 1 0 16 0 16.00
Binura Fernando 4 0 22 3 5.50
Matheesha Pathirana 4 0 37 1 9.25
Chamika Karunaratne 2 0 37 0 18.50
Dunith Wellalage 4 0 27 0 6.75
Shadab Khan 4 0 21 4 5.25
Glenn Phillips 1 0 17 0 17.00


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz b Zahoor Khan 29 17 1 3 170.59
Shevon Daniel c Niroshan Dickwella b Maheesh Theekshana 7 6 1 0 116.67
Muhammad Waseem c Isuru Udana b Maheesh Theekshana 16 9 1 1 177.78
Sadeera Samarawickrama c Maheesh Theekshana b Isuru Udana 16 17 0 0 94.12
Glenn Phillips c Tim Seifert b Sahan Arachchige 26 18 1 1 144.44
Thisara Perera b Sahan Arachchige 18 14 3 0 128.57
Shadab Khan c Tim Seifert b Malsha Tharupathi 0 3 0 0 0.00
Dunith Wellalage c Tim Seifert b Isuru Udana 45 26 5 2 173.08
Chamika Karunaratne run out (Pasindu Sooriyabandara) 12 10 1 0 120.00
Binura Fernando not out 0 0 0 0 0.00


Extras 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 172/9 (20 Overs, RR: 8.6)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 4 0 20 2 5.00
Dwaine Pretorius 3 0 40 0 13.33
Isuru Udana 4 0 34 2 8.50
Zahoor Khan 3 0 32 1 10.67
Malsha Tharupathi 3 0 25 1 8.33
Sahan Arachchige 3 0 21 2 7.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<