Home Tamil விறுவிறுப்பான போட்டியில் கோல் மார்வல்ஸ் அணிக்கு திரில் வெற்றி!

விறுவிறுப்பான போட்டியில் கோல் மார்வல்ஸ் அணிக்கு திரில் வெற்றி!

Lanka Premier League 2024

164
Lanka Premier League 2024

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தி கோல் மார்வல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

>>இந்திய T20I அணியில் இணையும் தமிழகத்தின் சாய் சுதர்ஷன்<<

ஜப்னா கிங்ஸ் அணியின் முதல் விக்கெட் 20 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதும், அதனை தொடர்ந்து அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் 83 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இதில் பெதும் நிஸ்ஸங்க 33 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 48 பந்துகளுக்கு 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இவர்களின் இணைப்பாட்டத்தின் பின்னர் சற்று தடுமாறிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு, அணித்தலைவர் சரித் அசலங்க வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அழுத்தத்தை குறைத்தார். சரித் அசலங்க 15 பந்துகளுக்கு 33 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 8 பந்துகளுக்கு 18 ஓட்டங்களையும் வேகமாக பெற்றுக்கொடுக்க ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் கோல் மார்வல்ஸ் அணியின் சார்பாக ஷாஹூர் கான் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கோல் மார்வல்ஸ் அணி வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. குறிப்பாக அணித்தலைவர் நிரோஷன் டிக்வெல்ல பவர்-பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்த முதல் 6 ஓவர்களில் விக்கெட்டிழப்பின்றி 53 ஓட்டங்களை பெற்றது.

எனினும் வேகமான ஆரம்பத்தை பெற்ற நிரோஷன் டிக்வெல்ல 27 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அலெக்ஷ் ஹேல்ஸ் கோல் மார்வல்ஸ் அணியின் ஓட்டக்குவிப்பை துரிதப்படுத்தினார்.

இவர் 47 பந்துகளில் 65 ஓட்டங்களை விளாசி அணியை வெற்றியிலக்குக்கு அருகில் அழைத்துச்செல்ல முயற்சித்த போதும், துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கடைசி 3 ஓவர்களில் 39 ஓட்டங்கள் தேவைப்பட்ட போதும், ஜனித் லியனகே மற்றும் டுவைன் பிரிட்டோரியர்ஸ் ஆகியோர் அற்புதமாக ஆடினர்.

>>இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு முக்கிய பதவி<<

இதில் ஜனித் லியனகே 13 பந்துகளில் 25 ஓட்டங்களை அடித்தாடியதுடன், கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரை வீசிய அசித பெர்னாண்டோ ஜனித் லியனகேவின்

விக்கெட்டினை வீழ்த்தி இறுதி பந்துவரை ஆட்டத்தை நகர்த்தியிருந்தார். எனினும் ஒரு பந்துக்கு 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சஹான் ஆராச்சிகே பௌண்டரியை விளாசி கோல் அணிக்கு தங்களுடைய முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். எனவே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து கோல் மார்வல்ஸ் அணி வெற்றிபெற்றது. ஜப்னா அணிக்காக பந்துவீச்சில் பெபியன் எலன் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Result


Galle Marvels
179/5 (20)

Jaffna Kings
177/7 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Alex Hales b Dwaine Pretorius 51 33 6 2 154.55
Kusal Mendis c Isuru Udana b Zahoor Khan 4 7 0 0 57.14
Avishka Fernando c Maheesh Theekshana b Dwaine Pretorius 59 48 7 1 122.92
Rilee Rossouw lbw b Zahoor Khan 1 7 0 0 14.29
Charith Asalanka c Bhanuka Rajapaksa b Zahoor Khan 33 15 3 2 220.00
Dhananjaya de Silva c Janith Liyanage  b Isuru Udana 18 8 2 1 225.00
Fabian Allen lbw b Isuru Udana 0 1 0 0 0.00
Vijayakanth Viyaskanth not out 1 1 0 0 100.00
Pramod Madushan not out 4 1 1 0 400.00


Extras 6 (b 0 , lb 0 , nb 1, w 5, pen 0)
Total 177/7 (20 Overs, RR: 8.85)
Bowling O M R W Econ
Dwaine Pretorius 4 0 23 2 5.75
Isuru Udana 4 0 60 2 15.00
Zahoor Khan 4 0 34 3 8.50
Maheesh Theekshana 4 0 24 0 6.00
Malsha Tharupathi 3 0 23 0 7.67
Janith Liyanage  1 0 13 0 13.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c & b Dhananjaya de Silva 47 27 8 1 174.07
Alex Hales b Fabian Allen 65 47 7 2 138.30
Tim Seifert b Fabian Allen 10 13 1 0 76.92
Bhanuka Rajapaksa c Vijayakanth Viyaskanth b Asitha Fernando  13 13 0 1 100.00
Janith Liyanage  c Pathum Nissanka b Asitha Fernando  25 13 3 1 192.31
Dwaine Pretorius not out 9 5 0 1 180.00
Sahan Arachchige not out 5 2 1 0 250.00


Extras 5 (b 0 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total 179/5 (20 Overs, RR: 8.95)
Bowling O M R W Econ
Jason Behrendorff 4 0 37 0 9.25
Asitha Fernando  4 0 40 2 10.00
Pramod Madushan 2 0 25 0 12.50
Dhananjaya de Silva 4 0 16 1 4.00
Vijayakanth Viyaskanth 2 0 26 0 13.00
Fabian Allen 4 0 33 2 8.25



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<