இந்திய T20I அணியில் இணையும் தமிழகத்தின் சாய் சுதர்ஷன்

147

ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய T20I அணி தமது வீரர்கள் குழாத்தினுள் சாய் சுதர்ஷன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்சித் ரனா ஆகிய வீரர்களினை இணைத்துள்ளது. 

இளையோர் ஒருநாள் தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடுகின்றது. இந்த T20I தொடருக்கான சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணியில் உள்ளடக்கப்பட்ட சஞ்சு சாம்சன், சிவம் தூபே மற்றும் யஷாஷ்வி ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் T20 உலகக் கிண்ணத்தினை அடுத்து மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்டிருக்கும் புயலில் சிக்கியிருக்கின்றனர் 

எனவே புயலில் சிக்கியுள்ள குறித்த வீரர்களின் பிரதியீடாக ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் நடைபெறும் முதல் இரண்டு T20I போட்டிகளுக்காக சாய் சுதர்ஷன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்சித் ரனா ஆகிய வீரர்கள் இந்திய T20I குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர் 

இந்த வீரர்களில் தமிழ் நாட்டினைச் சேர்ந்த சாய் சுதர்சன் இந்திய அணிக்காக ஏற்கனவே ஒருநாள் அறிமுகம் பெற்றிருப்பதோடு, ஜித்தேஷ் சர்மா ஆசிய விளையாட்டு விழா அடங்கலாக இந்திய அணிக்காக இதுவரை 9 T20I போட்டிகளில் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் ஹர்சித் ரனா இறுதியாக நடைபெற்று முடிந்த IPL தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக பிரகாசித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது 

அறிமுக வீரர்களை மேற்கிந்திய தீவுகள் தொடரில் களமிறக்கும் இங்கிலாந்து

அதேவேளை புயலில் சிக்கியிருக்கும் சஞ்சு சாம்சன், சிவம் தூபே மற்றும் யஷாஷ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூன்று வீரர்களும் T20 உலகக் கிண்ணத்தினை வெற்றி கொண்ட இந்திய அணி நாடு திரும்பிய பின்னர், ஜிம்பாப்வே T20 தொடரில் நடைபெறவிருக்கும் இறுதி மூன்று  போட்டிகளிலும் பங்கேற்க ஹராரே பயணமாகுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாஜிம்பாப்வே அணிகள் பங்கெடுக்கும் T20I தொடர் இம்மாதம் 06ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஹராரேயில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<