T20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதியில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து!

ICC Men’s T20 World Cup 2024

55
ICC Men’s T20 World Cup 2024

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தகுதிபெற்றுள்ளன.

சுப்பர் 8 சுற்றின் குழு இரண்டில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அமெரிக்க அணிகள் இடம்பெற்றிருந்தன.

>>மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை மகளிர் T20 குழாம் அறிவிப்பு<<

இதில் அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் போட்டிகளில் இங்கிலாந்து அணி அமெரிக்க அணியை எதிர்கொண்டதுடன், மேற்கிந்திய தீவுகள் அணியானது தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது.

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. அதுமாத்திரமின்றி அமெரிக்க அணி நிர்ணயித்த 116 என்ற வெற்றியிலக்கை எந்தவித விக்கெட்டிழப்புமின்றி 9.4 ஓவர்களில் கடந்த இங்கிலாந்து அணி +1.992 என்ற ஓட்ட விகித்தை பெற்றுக்கொண்டது.

இதன்காரணமாக 4 புள்ளிகளை பெற்றிருந்த தென்னாபிரிக்க அணியும், சிறந்த ஓட்ட விகிதத்துடன் 2 புள்ளிகளை பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியும் கட்டாய வெற்றியை நோக்கி இன்றைய தினம் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

குறித்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 135/8 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 15/2 ஓட்டங்களை பெற்றிருக்கும் போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. பின்னர் ஆரம்பித்த போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு 17 ஓவர்களில் 123 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

>>ILT20 புதிய தொடரில் எட்டு இலங்கை வீரர்கள்<<

அதன்படி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியினை பதிவுசெய்து அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்தது.

தென்னாபிரிக்க அணி சுப்பர் 8 குழுநிலைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்டதுடன், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<