T20 உலகக் கிண்ணம் தொடர்பில் ட்ரென்ட் போல்டின் அறிவிப்பு

63

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் தன்னுடைய இறுதி T20 உலகக் கிண்ணமாக 2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தை குறிப்பிட்டுள்ளார். 

T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

34 வயது நிரம்பிய போல்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நியூசிலாந்து அணியின் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் உகண்டா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்ந நியூசிலாந்து அணியின் போட்டியினை அடுத்தே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 

உகண்டா அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி அபார வெற்றியினைப் பதிவு செய்த போதிலும், அவ்வணி இம்முறை T20 உலகக் கிண்ண தொடரில் இருந்து லீக் சுற்றோடு வெளியேறியிருக்கின்றது. போல்ட் உகண்டா அணியுடனான போட்டியில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது குழு C இல் காணப்படும் நியூசிலாந்து அணிக்கு பபுவா நியூ கினியா அணியுடனான போட்டி மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், போல்டின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

போல்டின் வயது தற்போது 34 ஆகும் நிலையில் அவர் விளையாடும் இறுதி கிரிக்கெட் உலகக் கிண்ணமாகவும் இது அமைகின்றது எனக் குறிப்பிடப்படுகின்றது 

தனது உலகக் கிண்ண பிரியாவிடை தொடர்பில் போல்ட் இவ்வாறு கருத்து வெளியிட்டார். 

என்னைப் பற்றி நான் பேசும் இந்த தருணத்தில் இது எனது இறுதி T20 உலகக் கிண்ணம் என்பதனை குறிப்பிடுகின்றேன்.” 

இதுவரை நியூசிலாந்திற்காக 17 T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடியுள்ள போல்ட் அதில் மொத்தமாக 32 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதோடு, நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<