Home Tamil பங்களாதேஷ் அணியுடன் தோல்வியினைத் தழுவிய இலங்கை

பங்களாதேஷ் அணியுடன் தோல்வியினைத் தழுவிய இலங்கை

ICC T20 Cricket World Cup 2024

200

T20 உலகக் கிண்ணத் தொடரின் குழு D அணிகளுக்கான மோதலில் இன்று பங்களாதேஷ் இலங்கை வீரர்களை 2 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.

மேலும் பங்களாதேஷ் அணியுடன் அடைந்த இந்த தோல்வியுடன் இலங்கை அணியானது T20 உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு தொடர் தோல்விகளுடன் சுபர் 8 சுற்றுக்கு செல்வதும் சந்தேகமாகியிருக்கின்றது.

பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான போட்டி முன்னதாக டல்லாஸில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் முதலில் இலங்கை வீரர்களை துடுப்பாடப் பணித்தார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் பெதும் நிஸ்ஸங்க மூலம் சிறந்த ஆரம்பத்தினை பெற்ற போதிலும் பின்னர் சறுக்கத் தொடங்கியதனால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தனர்.

இலங்கைத் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க 28 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ரிசாட் ஹொசைன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர். அதேநேரம் தஸ்கின் அஹ்மட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 125 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை பந்துவீச்சில் நெருக்கடி வழங்கிய போதிலும், பங்களாதேஷ் போட்டியின் வெற்றி இலக்கினை 19 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களுடன் அடைந்தது.

பங்களாதேஷ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் தவ்ஹீத் ரிதோய் 20 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 40 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் லிடன் தாஸ் 36 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கைப் பந்துவீச்சில் நுவான் துஷார 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களை சுருட்டினார். போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் ரிசாட் ஹொசைன் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


Bangladesh
125/8 (19)

Sri Lanka
124/9 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Najmul Hossain Shanto b Mustafizur Rahman 47 28 7 1 167.86
Kusal Mendis b Taskin Ahamed 10 8 2 0 125.00
Kamindu Mendis c Tanzim Hasan Sakib b Mustafizur Rahman 4 5 1 0 80.00
Dhananjaya de Silva st Liton Das b Rishad Hossain 21 26 1 0 80.77
Charith Asalanka c Shakib Al Hasan b Rishad Hossain 19 21 0 1 90.48
Wanidu Hasaranga c Soumya Sarkar b Rishad Hossain 0 1 0 0 0.00
Angelo Mathews c Mustafizur Rahman b Tanzim Hasan Sakib 16 19 1 0 84.21
Dasun Shanaka c Liton Das b Taskin Ahamed 3 7 0 0 42.86
Maheesh Theekshana c Tanzim Hasan Sakib b Mustafizur Rahman 0 3 0 0 0.00
Matheesha Pathirana not out 0 1 0 0 0.00
Nuwan Thushara not out 0 1 0 0 0.00


Extras 4 (b 0 , lb 2 , nb 0, w 2, pen 0)
Total 124/9 (20 Overs, RR: 6.2)
Bowling O M R W Econ
Tanzim Hasan Sakib 4 0 24 1 6.00
Shakib Al Hasan 3 0 30 0 10.00
Taskin Ahamed 4 0 25 2 6.25
Mustafizur Rahman 4 0 17 3 4.25
Rishad Hossain 4 0 22 3 5.50
Mahmudullah 1 0 4 0 4.00


Batsmen R B 4s 6s SR
Tanzid Hasan b Nuwan Thushara 3 6 0 0 50.00
Soumya Sarkar c Wanidu Hasaranga b Dhananjaya de Silva 0 2 0 0 0.00
Liton Das lbw b Wanidu Hasaranga 36 38 2 1 94.74
Najmul Hossain Shanto c Charith Asalanka b Nuwan Thushara 7 13 0 0 53.85
Towhid Hridoy lbw b Wanidu Hasaranga 40 20 1 4 200.00
Shakib Al Hasan c Maheesh Theekshana b Matheesha Pathirana 8 14 0 0 57.14
Mahmudullah not out 16 13 0 1 123.08
Rishad Hossain b Nuwan Thushara 1 3 0 0 33.33
Taskin Ahamed lbw b Nuwan Thushara 0 1 0 0 0.00
Tanzim Hasan Sakib not out 1 4 0 0 25.00


Extras 13 (b 0 , lb 1 , nb 0, w 12, pen 0)
Total 125/8 (19 Overs, RR: 6.58)
Bowling O M R W Econ
Dhananjaya de Silva 2 0 11 1 5.50
Nuwan Thushara 4 0 18 4 4.50
Maheesh Theekshana 4 0 25 0 6.25
Wanidu Hasaranga 4 0 32 2 8.00
Matheesha Pathirana 4 0 27 1 6.75
Dasun Shanaka 1 0 11 0 11.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<