Home Tamil தோல்வியுடன் T20 உலகக் கிண்ணத்தை ஆரம்பித்த இலங்கை அணி

தோல்வியுடன் T20 உலகக் கிண்ணத்தை ஆரம்பித்த இலங்கை அணி

ICC World T20 2024

170
ICC World T20 2024

இன்று (03) நடைபெற்று முடிந்திருக்கும் தென்னாபிரி;க்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான 2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்கா 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>>அனைத்துவகை போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற கேதர் ஜாதவ்!

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இலங்கை – தென்னாபிரிக்கா அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகியது. குழு D அணிகளின் இந்த மோதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹஸரங்க முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை வீரர்கள் மிக மெதுவான ஆரம்பத்தினைப் பெற்றுக் கொண்டனர். இலங்கை அணி முதல் பவர் பிளேயில் 24 ஓட்டங்களை ஒரு விக்கெட்டினை இழந்து எடுத்தது.

அதன் பின்னர் தொடர்ந்த போட்டியில் கேசவ் மஹராஜ் மற்றும் அன்ட்ரிச் நோர்கியே ஆகியோரின் பந்துவீச்சுக்கு தடுமாறிய இலங்கை வீரர்கள் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 77 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர். அத்துடன் இது இலங்கை அணி T20 போட்டிகளில் பெற்ற அதிகுறைந்த ஓட்டங்களாகவும் மாறியது.

இலங்கைத் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்கள் எடுத்ததோடு, ஏனைய வீரர்களில் மெதிவ்ஸ் 2 சிக்ஸர்கள் பெற்று 16 ஓட்டங்கள் பெற்றார். தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் அன்ட்ரிச் நோர்கியே 07 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்க்க, ககிஸோ றபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 78 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களுடன் அடைந்தது. தென்னாபிரிக்க அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் குயின்டன் டி கொக் 20 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கைப் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நுவான் துஷார மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக என்ட்ரிச் நோர்கியே தெரிவாகினார்.

இப்போட்டியோடு T20 உலகக் கிண்ணத் தொடரினை தோல்வியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை அணியானது தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (08) பங்களாதேஷினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
77/10 (19.1)

South Africa
80/4 (16.2)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Heinrich Klaasen b Ottneil Baartman 3 8 0 0 37.50
Kusal Mendis c Glenton Stuurman b Anrich Nortje 19 30 1 0 63.33
Kamindu Mendis c Reeza Hendricks b Anrich Nortje 11 15 1 0 73.33
Wanidu Hasaranga st Quinton de Kock b Keshav Maharaj 0 2 0 0 0.00
Sadeera Samarawickrama b Keshav Maharaj 0 1 0 0 0.00
Charith Asalanka c Reeza Hendricks b Anrich Nortje 6 9 0 0 66.67
Angelo Mathews c Ottneil Baartman b Anrich Nortje 16 15 0 2 106.67
Dasun Shanaka b Kagiso Rabada 9 10 0 1 90.00
Maheesh Theekshana not out 7 16 1 0 43.75
Matheesha Pathirana c Aiden Markram b Kagiso Rabada 0 4 0 0 0.00
Nuwan Thushara run out (Marco Jansen) 0 4 0 0 0.00


Extras 6 (b 0 , lb 3 , nb 0, w 3, pen 0)
Total 77/10 (19.1 Overs, RR: 4.02)
Bowling O M R W Econ
Marco Jansen 3.1 0 15 0 4.84
Kagiso Rabada 4 1 21 2 5.25
Ottneil Baartman 4 1 9 1 2.25
Keshav Maharaj 4 0 22 2 5.50
Anrich Nortje 4 0 7 4 1.75


Batsmen R B 4s 6s SR
Quinton de Kock c & b Wanidu Hasaranga 20 27 0 1 74.07
Reeza Hendricks c Kusal Mendis b Nuwan Thushara 4 2 1 0 200.00
Aiden Markram c Kusal Mendis b Dasun Shanaka 12 14 0 1 85.71
Glenton Stuurman c Charith Asalanka b Wanidu Hasaranga 13 28 0 0 46.43
Heinrich Klaasen not out 19 22 1 1 86.36
David Miller not out 6 6 1 0 100.00


Extras 6 (b 0 , lb 3 , nb 1, w 2, pen 0)
Total 80/4 (16.2 Overs, RR: 4.9)
Bowling O M R W Econ
Angelo Mathews 3 0 16 0 5.33
Nuwan Thushara 3 0 18 1 6.00
Dasun Shanaka 3 1 6 1 2.00
Matheesha Pathirana 3 0 12 0 4.00
Wanidu Hasaranga 3.2 0 22 2 6.88
Maheesh Theekshana 1 0 3 0 3.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<