Home Tamil தோல்வியுடன் T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளை ஆரம்பித்த இலங்கை

தோல்வியுடன் T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளை ஆரம்பித்த இலங்கை

ICC World T20 2024

81

2024ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணத் தொடருக்காக ஒழுங்கு செய்யப்பட்ட பயிற்சிப் போட்டிகளில் நேற்று (28) நெதர்லாந்தினை எதிர்கொண்ட இலங்கை அணியானது 20 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியுள்ளது.

இங்கிலாந்து செல்லும் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி

ப்ளோரிடாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த பயிற்சி மோதலில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நெதர்லாந்து வீரர்களுக்கு வழங்கியது.

தொடர்ந்து போட்டியில் துடுப்பாடிய நெதர்லாந்து வீரர்கள் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்தனர். நெதர்லாந்து துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தேஜா நிடாமனுரு 24 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக களம் வந்த மைக்கல் லேவிட் 24 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 2 விக்கெட்டுக்களையும் அஞ்செலோ மெதிவ்ஸ், நுவான் துஷார மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சுருட்டினர்.

LPL T20 தொடரின் விளம்பர தூதுவராக ஆஸி. நட்சத்திரம்

அதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கிற்காக தமது துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை வீரர்கள் 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர். இலங்கைத் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் அணித்தலைவர் வனிந்து ஹஸரங்க 5 சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.  மறுமுனையில் தனன்ஞய டி சில்வா 36 ஓட்டங்களைப் பெற்றதோடு, தசுன் ஷானக்க 20 பந்துகளில் 35 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்திருந்தார்.

நெதர்லாந்து பந்துவீச்சில் கைல் கிளெய்ன் மற்றும் ஆர்யன் தட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை T20 உலகக் கிண்ணத்திற்கான அடுத்த பயிற்சிப் போட்டியில் வெள்ளிக்கிழமை (31) அயர்லாந்தை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<