நிறைவுக்கு வந்த குசல் மெண்டிஸின் வீசா சிக்கல்!

ICC Men’s T20 World Cup 2024

86

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஐக்கிய அமெரிக்காவுக்கான வீசாவை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் அணி கடந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போதும், குசல் மெண்டிஸ் அணியுடன் பயணிக்கவில்லை. 

2024 LPL இல் அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

குசல் மெண்டிஸ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சம்பந்தப்பட்டிருந்த விடயம் தொடர்பிலான ஆவணத்தை  அமெரிக்க தூதரகம் கோரியிருந்தது. குறித்த ஆவணத்தை சமர்ப்பித்ததை தொடர்ந்து அவருக்கான அமெரிக்க வீசா வழங்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் குசல் மெண்டிஸ் அடுத்துவரும் நாட்களில் அமெரிக்கா நோக்கி பயணித்து, அணியின் பயிற்சிகளில் இணைந்துக்கொள்வார் எனவும், பயிற்சிப்போட்டிகளிலும் விளையாடுவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அமெரிக்கா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மோரிஸ்வில்லேயில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<