SLC டீம் கிரீனின் வெற்றிக்கு உதவிய மிஷார, ரவிந்து மற்றும் ஆராச்சிகே!

SLC T20 World Cup Preparation Matches

155

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டித் தொடரில் இன்று (11) நடைபெற்ற போட்டியில் SLC டீம் கிரீன் அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.  

SLC டீம் கிரீன் அணி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. கமில் மிஷார சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்ததுடன், பின்வரிசையில் ரவிந்து பெர்னாண்டோ சிறப்பாக இன்னிங்ஸை நிறைவு செய்ய உதவினார். 

டிக்வெல்ல, அவிஷ்கவின் பிரகாசிப்புடன் SLC டீம் ரெட் அணிக்கு வெற்றி

கமில் மிஷார 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களை குவித்ததுடன், ரவிந்து பெர்னாண்டோ 31 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை பெற்றார். இவர்களின் இந்த பிரகாசிப்புகளின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை கிரீன் அணி குவித்தது. பந்துவீச்சில் டில்சான் மதுசங்க, வனிந்து ஹஸரங்க மற்றும் துனித் வெல்லாலகே அகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய SLC டீம் யெல்லோவ் அணிக்காக அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் மாத்திரம் 22 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க தவறினர். 

இந்தநிலையில் 15.1 ஓவர்கள் நிறைவில் SLC டீம் யெல்லோவ் அணி 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் சஹான் ஆராச்சிகே 4 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

சுருக்கம் 

 

SLC டீம் கிரீன் – 183/8 (20), ரவிந்து பெர்னாண்டோ 47, கமில் மிஷார 42, வனிந்து ஹஸரங்க 2/31, டில்சான் மதுசங்க 2/37, துனித் வெல்லாலகே 2/43 

 

SLC டீம் யெல்லோவ் – 101/10 (15.1), குசல் மெண்டிஸ் 38, சஹான் ஆராச்சிகே 4/8, கசுன் ராஜித 2/20 

 

முடிவு – SLC டீம் கிரீன் அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<