T20 உலகக்கிண்ணத்துக்கான வீசாக்களை பெற்றுக்கொண்ட 25 இலங்கை வீரர்கள்

ICC Men’s T20 World Cup 2024

177

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் 25 வீரர்கள் தங்களுடைய அமெரிக்க வீசாக்களை  பெற்றுக்கொண்டுள்ளனர். 

இலங்கை அணியின் 25 வீரர்கள் வீசாக்களை பெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

>> மகளிர் T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் இலங்கை அணியின் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் இல்லாவிட்டாலும், அவரும் வீசாவை பெற்றுக்கொண்டுள்ளதாக எமது இணையத்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. 

இலங்கை கிரிக்கெட் சபை ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான 15 பேர்கொண்ட குழாத்தை அறிவிக்கவில்லை. எனினும், வீசா பெற்றுள்ள 25 வீரர்களிலிருந்து இறுதி குழாம் பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடர் அடுத்த மாதம் முதலாம் திகதி ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வீசா பெற்றுக்கொண்ட இலங்கை வீரர்கள் 

வனிந்து ஹஸரங்க (தலைவர்), குசல் மெண்டிஸ், துனித் வெல்லாலகே, அகில தனன்ஜய, பானுக ராஜபக்ஷ, ஜெப்ரி வெண்டர்சே, நுவான் துஷார, மஹீஷ் தீக்ஷன, தசுன் ஷானக, தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, விஜயகாந்த் வியாஸ்காந்த், சரித் அசலங்க, பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, டில்சான் மதுசங்க, பெதும் நிஸ்ஸங்க, மதீஷ பதிரண, சதீர சமரவிக்ரம, பிரமோத் மதுசான், அஞ்செலோ மெதிவ்ஸ் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<