ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் T20 உலகக்கிண்ண குழாத்தில் ஷெமார் ஜோசப் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருவதுடன், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். எனினும் முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் T20I அணியில் இடம்பிடித்துள்ளார்.
>>சிராஸ், சூரியபண்டார அதிரடியில் ஒருநாள் தொடரை வென்ற இலங்கை A அணி<<
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக ரோவ்மன் பவெல் செயற்படவுள்ளதுடன், உப தலைவராக அல்ஷாரி ஜோசப் பெயரிடப்பட்டுள்ளார். அதேநேரம் ஷிம்ரொன் ஹெட்மையர் உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.
எவ்வாறாயினும் கடைசி இரண்டு தொடர்களில் விளையாடிய கெயல் மேயர்ஸ் மற்றும் ஓசானே தோமஸ் ஆகியோர் T20 உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெறவில்லை.
அதேநேரம் ஜொன்சன் சார்ல்ஸ், ரொஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன், பிரெண்டன் கிங், ஷேய் ஹோப், அன்ரே ரசல், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் போன்ற முன்னணி வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூகினியா மற்றும் உகண்டா அணிகளுடன் குழு Cயில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் போட்டியில் ஜூன் 2ம் திகதி பப்புவா நியூகினியா அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் குழாம்
ரோவ்மன் பவெல் (தலைவர்), அல்ஷாரி ஜோசப் (உப தலைவர்), ரொஸ்டன் சேஸ், ஷிம்ரொன் ஹெட்மையர், ஷமார் ஜோசப், பிரெண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ஷேய் ஹோப், அன்ரே ரசல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், ஆகில் ஹொஸைன், குடகேஷ் மொட்டீ, ஷர்பேன் ரதபோர்ட்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<