ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய மெண்டிஸ், மெதிவ்ஸ்!

Sri Lanka tour of Bangladesh 2024

172
Sri Lanka tour of Bangladesh 2024

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான கமிந்து மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றங்களை கண்டுள்ளனர்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பதிவுசெய்திருந்தது.

>>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<<

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இதன்மூலம் 18 இடங்கள் முன்னேறியுள்ள இவர் 46வது இடத்தை பிடித்துள்ளார். அதுமாத்திரமின்றி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 46 இடங்கள் முன்னேறி 117வது இடத்தை பிடித்துள்ளார்.

அதேநேரம் அஞ்செலோ மெதிவ்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 23 மற்றும் 56 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனவே 2 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை பிடித்துள்ளார். இதேவேளை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 93 ஓட்டங்களை பெற்றிருந்த குசல் மெண்டிஸ் 3 இடங்கள் முன்னேறி 52வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையை பொருத்தவரை அசித பெர்னாண்டோ 7 இடங்கள் முன்னேறி 27வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அசித பெர்னாண்டோ மாத்திரமின்றி விஷ்வ பெர்னாண்டோ இரண்டு இடங்கள் முன்னேறி 41வது இடத்தையும், லஹிரு குமார 2 இடங்கள் முன்னேறி 44வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<