பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் விலகியுள்ளார்.
தினேஷ் சந்திமால் குடும்ப மருத்துவ அவசரநிலை காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
>> சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க போராடும் இலங்கை அணி
சிட்டகொங்கில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் முதல் இன்னிங்ஸில் 59 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தார். எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தடுப்பில் இவர் ஈடுபட மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மருத்துவ அவசரநிலை காரணமாக தினேஷ் சந்திமால் உடனடியாக நாட்டுக்கு திரும்பி, அவருடைய குடும்பத்துடன் இணைந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 500 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<