சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என பங்களாதேஷ் முன்னிலை அடைந்திருக்கின்றது.
>>செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்<<
முன்னதாக சட்டோக்ரமில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருந்தார்.
இப்போட்டிக்கான இலங்கை குழாம் வேகப்பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோவிற்குப் பதிலாக லஹிரு குமாரவிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது. இதேவேளை உபாதை காரணமாக பங்களாதேஷ் T20 தொடரில் ஆடாத பெதும் நிஸ்ஸங்க இலங்கை குழாத்திற்குள் இணைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை XI
குசல் மெண்டிஸ், (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன, ப்ரமோத் மதுசான், டில்சான் மதுசங்க, லஹிரு குமார
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ – பெதும் நிஸ்ஸங்க ஜோடி சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தனர். பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக 71 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்ட நிலையில் அவிஷ்க பெர்னாண்டோ தன்ஷிம் சகீப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவிஷ்க ஆட்டமிழக்கும் போது ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகளோடு 33 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டும் பறிபோனது அவர் 36 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். பெதும் நிஸ்ஸங்கவினை அடுத்து புதிய துடுப்பாட்டவீரராக வந்த சதீர சமரவிக்ரம 03 ஓட்டங்களுடன் ஓய்வறை நடக்க இலங்கை அணியானது ஒரு கட்டத்தில் 84 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து புதிய துடுப்பாட்டவீரராக வந்த சரித் அசலன்கவுடன் குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக நேர்த்தியான இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க முயன்ற போதிலும் அது 44 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது. இலங்கை அணியின் நான்காவது விக்கெட்டாக மாறிய சரித் அசலன்க 18 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இதன் பின்னர் இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே ஆகிய இருவரும் சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கியிருந்த போதிலும் பின்வரிசையில் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி இறுதியில் 48.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 29ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த குசல் மெண்டிஸ் 75 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஜனித் லியனகே தன்னுடைய மூன்றாவது ஒருநாள் அரைச்சதத்தோடு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 69 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
>>LPL, லங்கா T10 தொடர்களுக்கான புதிய அணிகள் அறிமுகம்!<<
பங்களாதேஷ் பந்துவீச்சில் சொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மட் மற்றும் தன்ஸிம் சகீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 256 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணியானது ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் அதன் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரது துடுப்பாட்ட உதவியுடன் போட்டியின் வெற்றி இலக்கினை 44.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களுடன் அடைந்தது.
பங்களாதேஷ் அணியின் வெற்றியினை உறுதிப்படுத்திய அதன் துடுப்பாட்டத்தில் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ தன்னுடைய 03ஆவது ஒருநாள் சதத்தோடு 2 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 122 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் முஷ்பிகுர் ரஹீம் 84 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதிலும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக நஜ்முல் ஹொசைன் ஷன்டோ தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Soumya Sarkar b Tanzim Hasan | 36 | 28 | 5 | 1 | 128.57 |
Avishka Fernando | c Mushfiqur Rahim b Tanzim Hasan | 33 | 33 | 5 | 1 | 100.00 |
Kusal Mendis | c Najmul Hossain Shanto b Taskin Ahmed | 59 | 75 | 5 | 1 | 78.67 |
Sadeera Samarawickrama | c Mushfiqur Rahim b Tanzim Hasan | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Charith Asalanka | b Mehidy Hasan Miraz | 18 | 37 | 2 | 0 | 48.65 |
Janith Liyanage | c Mushfiqur Rahim b Shoriful Islam | 67 | 69 | 3 | 2 | 97.10 |
Wanidu Hasaranga | c Towhid Hridoy b Taskin Ahmed | 13 | 14 | 1 | 1 | 92.86 |
Mahesh Theekshana | c Liton Das b Taskin Ahmed | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Pramod Madushan | c & b | 8 | 15 | 1 | 0 | 53.33 |
Lahiru Kumara | not out | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Dilshan Madushanka | c & b | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 0 , lb 2 , nb 0, w 10, pen 0) |
Total | 255/10 (48.5 Overs, RR: 5.22) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shoriful Islam | 9.5 | 1 | 51 | 3 | 5.37 | |
Taskin Ahmed | 10 | 1 | 60 | 3 | 6.00 | |
Tanzim Hasan | 8.4 | 0 | 44 | 3 | 5.24 | |
Taijul Islam | 8 | 0 | 54 | 0 | 6.75 | |
Mehidy Hasan Miraz | 10 | 1 | 33 | 1 | 3.30 | |
Soumya Sarkar | 2.2 | 0 | 11 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Liton Das | b Dilshan Madushanka | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Soumya Sarkar | c Maheesh Theekshana b Dilshan Madushanka | 3 | 9 | 0 | 0 | 33.33 |
Najmul Hossain Shanto | not out | 122 | 129 | 13 | 2 | 94.57 |
Towhid Hridoy | b Pramod Madushan | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Mahmudullah | c Dilshan Madushanka b Lahiru Kumara | 37 | 37 | 4 | 1 | 100.00 |
Mushfiqur Rahim | not out | 73 | 84 | 8 | 0 | 86.90 |
Extras | 19 (b 0 , lb 2 , nb 0, w 17, pen 0) |
Total | 257/4 (44.4 Overs, RR: 5.75) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 8 | 1 | 44 | 2 | 5.50 | |
Pramod Madushan | 8 | 0 | 53 | 1 | 6.62 | |
Lahiru Kumara | 6 | 0 | 35 | 1 | 5.83 | |
Maheesh Theekshana | 9.4 | 0 | 47 | 0 | 5.00 | |
Wanidu Hasaranga | 8 | 0 | 54 | 0 | 6.75 | |
Janith Liyanage | 5 | 0 | 22 | 0 | 4.40 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<