வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் இடையிலான 107ஆவது பொன் அணிகளின் சமர் இரண்டு நாட்கள் கிரிக்கெட் பெரும் போட்டியின் (Annual Big Match) முதல் நாள் ஆட்டம் இன்று (01) நிறைவுக்கு வந்தது.
யாழ். பத்திரிசியார் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மைதான அணி யாழ்ப்பாண கல்லூரி அணியை முதலில் துடுப்பாடப் பணித்தது.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய யாழ்ப்பாண கல்லூரி சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றிருந்தது. முதல் விக்கெட்டுக்காக 55 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட யாழ்ப்பாண கல்லூரி அணியின் முதல் விக்கெட்டாக இமக்ஷன் 17 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். எனினும் ஏனைய ஆரம்ப வீரர்களில் ஒருவரான ரொபின்சன் உதயகுமார் யாழ்ப்பாண அணியை பலப்படுத்த தொடங்கினார்.
பங்களாதேஷ் தொடரிலிருந்து விலகிய குசல் பெரேரா!
ஆனால் பின்னர் குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த யாழ்ப்பாண கல்லூரி அணியானது 80.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸிற்காக எடுத்தது.
யாழ்ப்பாண கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ரொபின்சன் உதயகுமார் அரைச்சதம் விளாசி 04 பெளண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்தார்.
யாழ். பத்திரிசியார் கல்லூரி பந்துவீச்சில் அபிலாஷ் மற்றும் செஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் போட்டியின் முதல் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ். பத்திரிசியார் கல்லூரி அணியானது முதல் நாள் ஆட்டநிறைவில் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
ஸ்கோர் விபரம்
யாழ்ப்பாண கல்லூரி – 189 (80.2) ரொபின்சன் உதயகுமார் 63, அபிலாஷ் 30/3, செஹான் 30/3
புனித பத்திரிசியார் கல்லூரி – 45/3 (17)
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<