இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் A அணி!

Afghanistan A Team tour of Sri Lanka 2024

582
Afghanistan A Team tour of Sri Lanka 2024

ஆப்கானிஸ்தான் A அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் ஒரு நான்கு நாள் போட்டியில் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் A அணி எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதுடன், முதல் ஒருநாள் போட்டி ஏப்ரல் 28ம் திகதி ஆரம்பமாகிறது.

>>இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் சகீப்<<

அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 30, மே 3, மே 5 மற்றும் மே 7ம் திகதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதிவரை நான்கு நாள் போட்டி நடைபெறுவுள்ளது.

எவ்வாறாயினும் போட்டிகளுக்கான மைதானங்கள் தொடர்பிலான எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

திகதி

போட்டிகள்

ஏப்ரல் 28

முதல் ஒருநாள்

ஏப்ரல் 30

2வது ஒருநாள்
மே 3

3வது ஒருநாள்

மே 5

4வது ஒருநாள்

மே 7

5வது ஒருநாள்

மே 11 – 14

நான்கு நாள் போட்டி

 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<