சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக வெளியிட்டுள்ள ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் இரட்டைச்சதம் விளாசிய பெதும் நிஸ்ஸங்க, இரண்டாவது போட்டியில் 118 ஓட்டங்களை விளாசினார். குறித்த இந்த பிரகாசிப்புகளின் அடிப்படையில் 18வது இடத்திலிருந்து 7 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை பிடித்துள்ளார்.
மதீஷ பதிரணவின் பந்துவீச்சை புகழும் அஞ்செலோ மெதிவ்ஸ்!
பெதும் நிஸ்ஸங்கவை தவிர்த்து இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 15வது இடத்தை பிடித்துள்ளதுடன், சதீர சமரவிக்ரம 2 இடங்கள் முன்னேறி 39வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேநேரம் T20I தரவரிசையை பொருத்தவரை இலங்கை அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க முன்னேற்றங்களை கண்டுள்ளார். இவர் T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதுமாத்திரமின்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் 67 மற்றும் 22 ஓட்டங்களை விளாசியிருந்த வனிந்து ஹஸரங்க T20I சகலதுறை வீரர்கள் வரிசையிலும் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஒன்பதாவது இடத்திலிருந்த இவர் 7 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார்.
இதேவேளை T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஏற்கனவே இரண்டாவது இடத்திலிருந்த இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன 3வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன்,
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<