இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது T20I போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் முதல் T20I போட்டி தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 17ம் திகதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
>>இலங்கை – ஆப்கான் T20I தொடருக்கான டிக்கெட் விலைகள் வெளியானது
இந்தநிலையில் T20I தொடருக்கான டிக்கெட்டுகள் விற்பனையை இலங்கை கிரிக்கெட் சபை நேற்றைய தினம் (14) ஆரம்பித்திருந்தது. டிக்கெட்டுகள் விற்பனை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்த நிலையில், இன்றைய தினம் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே முதல் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள ரசிகர்கள் முயற்சிக்க வேண்டாம் என அறிவித்துள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பொருத்தவரை 2018ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக ஆடவருக்கான சர்வதேச போட்டி ஒன்று நடைபெறவுள்ளதுடன், முதன்முறையாக T20I போட்டித் தொடர் ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் விலைகள் பின்வருமாறு
அரங்கம் | விலை |
புற்தரை | 200 |
அரங்கம் C, D, E, F | 1000 |
அரங்கம் A மற்றும் B | 1500 |
கிரேண்ட் ஸ்டேண்ட் | 2500 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<