அவுஸ்திரேலிய T20I தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

167

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐசிசியின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்ற ஷெமார் ஜோசப்

அடுத்த வாரம் நியூசிலாந்து செல்லவிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது 

இந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதற்கட்டமாக T20I தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த T20I தொடருக்கான நியூசிலாந்து குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது 

அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து குழாத்தில் 2022ஆம் ஆண்டு இறுதியாக T20I போட்டிகளில் ஆடிய முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். ட்ரென்ட் போல்ட் இந்த T20I தொடரின் இரண்டாவது  மற்றும் மூன்றாவது T20I  போட்டிகளில் ஆடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.   

இதேநேரம் இந்த T20I தொடரின் முதல் போட்டிக்கான அணிக்குழாத்தில் மாத்திரம் அனுபவ வேகப்பந்துவீச்சாளரான டிம் சௌத்தி உள்வாங்கப்பட்டிருக்கின்றார் 

மீண்டும் பங்களாதேஷ் T20I அணியில் இணையும் மஹமதுல்லா 

நியூசிலாந்து T20I குழாத்தில் சகலதுறைவீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் அறிமுக வீரர் ஜோஸ் கிளார்க்ஸன் ஆகியோர் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, கால் உபாதைக்குள்ளான டேரைல் மிச்சல் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. 

அதேவேளை விரல் உபாதை காரணமாக மைக்கல் பிரஸ்வெல், ஜிம்மி நீஷம் (பங்களாதேஷ் பிரீமியர் லீக்) ஆகியோரும் தேர்வுகளுக்கு கருத்திற் கொள்ளப்படவில்லை.   

அவுஸ்திரேலியநியூசிலாந்து அணிகள் இடையிலான T20I தொடரின் முதல் போட்டி இம்மாதம் 21ஆம் திகதி வெலிங்டன் நகரிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே 23ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் ஓக்லன்ட் நகரிலும் இடம்பெறவிருக்கின்றன. 

நியூசிலாந்து T20I குழாம் 

மிச்சல் சான்ட்னர் (தலைவர்), பின் அலன், ட்ரென்ட் போல்ட் (இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள்), மார்க் சாப்மன், ஜோஸ் கிளார்க்ஸன், டெவோன் கொன்வேய், லோக்கி பெர்குஸன், மேட் ஹென்ரி, அடம் மில்னே, கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்பார்ட், இஸ் சோதி, டிம் சௌத்தி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<