இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாத்தின் தலைவராக இப்ரஹீம் ஷர்டான் பெயரிடப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் T20I அணியின் தலைவர் ரஷீட் கான் உபாதையிலிருந்து குணமடைந்துவரும் நிலையில், அவருக்கு பதிலாக இப்ரஹீம் ஷர்டான் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
>> ஆப்கான் தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு
இலங்கை அணிக்கு எதிரான T20I குழாத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையிலேயே, ஷர்டான் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். அதேநேரம் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முஜீப் உர் ரஹ்மான், முஜீப் ஷர்டான் மற்றும் மொஹமட் சலீம் ஆகியோர் உபாதை காரணமாக குழாத்தில் இடம்பெறவில்லை.
எனினும் 2023ம் ஆண்டு ஒரு T20I போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ள வபாடர் மொமண்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இவருடன் ஆப்கானிஸ்தான் T20I அணியில் தொடர்ந்து விளையாடி வரும் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், மொஹமட் நபி, குல்பதீன் நயீப், ஹஷரதுல்லாஹ் சஷாய், பஷல் ஹக் பரூகி, நவீன் உல் ஹக் மற்றும் நஜிபுல்லாஹ் ஷர்டான் ஆகியோர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I தொடர் இம்மாதம் 17, 19 மற்றும் 21ம் திகதிகளில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் குழாம்
இப்ரஹீம் ஷர்டான் (தலைவர்), வபாடர் மொமண்ட், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், மொஹமட் நபி, குல்பதீன் நயீப், ஹஷரதுல்லாஹ் சஷாய், பஷல் ஹக் பரூகி, நவீன் உல் ஹக், நஜிபுல்லாஹ் ஷர்டான், மொஹமட் இசாக் ரஹிமி, அஷ்மதுல்லாஹ் ஒமர்ஷாய், கரீம் ஜனட், சரபுதீன் அஸ்ரப், பரீட் அஹ்மட், நூர் அஹ்மட், குவைஸ் அஹ்மட்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<