ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் பெரிதான மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொள்ளவில்லை.
>>மீண்டும் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியாவிடம் இழந்த இந்தியா<<
ஜிம்பாப்வே தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை T20I குழாத்திலிருந்து ஒரு மாற்றம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் உபாதைக்குள்ளாகிய துஷ்மந்த சமீர T20I குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், பெதும் நிஸ்ஸங்க முழு உடற்தகுதியுடன் T20I அணிக்கு திரும்பியுள்ளார்.
இலங்கை T20I குழாத்தின் தலைவராக வனிந்து ஹஸரங்க தொடர்ந்தும் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவராக சரித் அசலங்க செயற்படவுள்ளார். அதுமாத்திரமின்றி ILT20 தொடரில் விளையாடி வரும் குசல் பெரேரா, மதீஷ பதிரண, தசுன் ஷானக மற்றும் SAT20 தொடரில் விளையாடிய நுவான் துஷார ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I தொடர் இம்மாதம் 17, 19 மற்றும் 21ம் திகதிகளில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
வனிந்து ஹஸரங்க (தலைவர்), சரித் அசலங்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பதிரண, நுவான் துஷார, அகில தனன்ஜய, பினுர பெர்னாண்டோ
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<