சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 42 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>>ஆப்கான் ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
மேலும் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இலங்கை அணியானது 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.
முன்னதாக கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கான் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தது.
இப்போட்டிக்கான இலங்கை அணி மூலம் பெதும் நிஸ்ஸங்க மீண்டும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பினைப் பெற்றிருக்க, ப்ரமோத் மதுசானும் இலங்கை ஒருநாள் இணைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை XI
அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுசான், டில்சான் மதுசங்க
பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க ஜோடி மிகச் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது. அந்தவகையில் இரண்டு வீரர்களும் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 182 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்தார். அவிஷ்க ஆட்டமிழக்கும் போது தன்னுடைய ஆறாவது ஒருநாள் அரைச்சதத்தோடு 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் பின்னர் புதிய வீரராக களம் வந்த குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். எனினும் பெதும் நிஸ்ஸங்க தான் ஒருநாள் போட்டிகளில் பெற்ற நான்காவது ஒருநாள் சதத்தோடு இலங்கைத் தரப்பினை பலப்படுத்தினார். அத்துடன் குசல் மெண்டிஸை அடுத்து களம் வந்த சதீர சமரவிக்ரம நிஸ்ஸங்கவுடன் இணைந்து இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 120 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து ஆட்டமிழந்த சதீர சமரவிக்ரம 36 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 45 ஓட்டங்கள் பெற்றார்.
இதன் பின்னர் புதிய வீரராக களம் வந்த குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். எனினும் பெதும் நிஸ்ஸங்க தான் ஒருநாள் போட்டிகளில் பெற்ற நான்காவது ஒருநாள் சதத்தோடு இலங்கைத் தரப்பினை பலப்படுத்தினார். அத்துடன் குசல் மெண்டிஸை அடுத்து களம் வந்த சதீர சமரவிக்ரம நிஸ்ஸங்கவுடன் இணைந்து இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 120 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து ஆட்டமிழந்த சதீர சமரவிக்ரம 36 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 45 ஓட்டங்கள் பெற்றார்.
24 ஆண்டு சாதனையை முறியடித்த பெதும் நிஸ்ஸங்க!
சமரவிக்ரமவின் பின்னர் பெதும் நிஸ்ஸங்க இரட்டைச் சதம் பெற்றதோடு குறித்த இரட்டைச் சதத்தின் உதவியோடு இலங்கை அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 381 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது காணப்பட்ட பெதும் நிஸ்ஸங்க 139 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 20 பௌண்டரிகள் அடங்கலாக 210 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இது இலங்கை அணி சார்பில் ஒருநாள் போட்டிகளில் வீரர் ஒருவர் பெற்ற முதல் இரட்டைச் சதமாகவும் மாறியது.
ஆப்கான் அணியின் பந்துவீச்சில் பரீட் அஹ்மட் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 382 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணியானது ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுக்களை பறிகொடுத்ததோடு ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஆப்கான் அணிக்காக ஜோடி சேர்ந்த அஸ்மத்துல்லா சஷாய் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் மிகச் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர். இந்த இரண்டு வீரர்கள் மூலம் ஆப்கான் அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக 242 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டிருந்தது. அதோடு மொஹமட் நபி மற்றும் அஸ்மத்துல்லா சஷாய் ஆகிய இருவரும் சதங்களையும் பூர்த்தி செய்தனர்.
எனினும் வெற்றி பெறுவதற்கு இந்த இணைப்பாட்டம் மொஹமட் நபி மற்றும் அஸ்மத்துல்லா சஷாய் ஆகியோரது சதங்கள் போதாத நிலையில் ஆப்கான் அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
ஆப்கான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் தன்னுடைய கன்னி ஒருநாள் சதத்தோடு 115 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 149 ஓட்டங்கள் எடுக்க, மொஹமட் நபி 130 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 15 பௌண்டரிகள் உடன் 136 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ப்ரமோத் மதுசான் 4 விக்கெட்டுக்களையும் துஷ்மன்த சமீர 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணி சார்பில் பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினார்.
ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | not out | 210 | 139 | 20 | 8 | 151.08 |
Avishka Fernando | c Ibrahim Zadran b Fareed Ahmad | 88 | 88 | 8 | 3 | 100.00 |
Kusal Mendis | c Gulbadin Naib b Mohammad Nabi | 16 | 31 | 1 | 0 | 51.61 |
Sadeera Samarawickrama | c Azmatullah Omarzai b Fareed Ahmad | 45 | 36 | 4 | 1 | 125.00 |
Charith Asalanka | not out | 7 | 8 | 0 | 0 | 87.50 |
Extras | 15 (b 0 , lb 3 , nb 2, w 10, pen 0) |
Total | 381/3 (50 Overs, RR: 7.62) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Fazal Haq Farooqi | 9 | 0 | 77 | 0 | 8.56 | |
Azmatullah Omarzai | 6 | 0 | 55 | 0 | 9.17 | |
Fareed Ahmad | 9 | 1 | 79 | 2 | 8.78 | |
Gulbadin Naib | 8 | 0 | 61 | 0 | 7.62 | |
Noor Ahmad | 8 | 0 | 62 | 0 | 7.75 | |
Mohammad Nabi | 10 | 0 | 44 | 1 | 4.40 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | b Pramod Madushan | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Ibrahim Zadran | c Pathum Nissanka b Pramod Madushan | 4 | 7 | 1 | 0 | 57.14 |
Rahmat Shah | c Kusal Mendis b Dushmantha Chameera | 7 | 14 | 0 | 0 | 50.00 |
Hashmatullah Shahidi | b Pramod Madushan | 7 | 11 | 1 | 0 | 63.64 |
Azmatullah Omarzai | not out | 149 | 115 | 13 | 6 | 129.57 |
Gulbadin Naib | c Pathum Nissanka b Dushmantha Chameera | 16 | 7 | 4 | 0 | 228.57 |
Mohammad Nabi | c & b Pramod Madushan | 136 | 130 | 15 | 3 | 104.62 |
Ikram Alikhil | not out | 10 | 14 | 1 | 0 | 71.43 |
Extras | 9 (b 0 , lb 3 , nb 1, w 5, pen 0) |
Total | 339/6 (50 Overs, RR: 6.78) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 9 | 0 | 65 | 0 | 7.22 | |
Pramod Madushan | 10 | 0 | 75 | 4 | 7.50 | |
Dushmantha Chameera | 7.3 | 0 | 55 | 2 | 7.53 | |
Wanidu Hasaranga | 10 | 0 | 57 | 0 | 5.70 | |
Maheesh Theekshana | 10 | 0 | 56 | 0 | 5.60 | |
Janith Liyanage | 3 | 0 | 25 | 0 | 8.33 | |
Charith Asalanka | 0.3 | 0 | 3 | 0 | 10.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<