மேஜர் லீக் T20 தொடரில் பயிற்சியாளராகும் ரிக்கி பொண்டிங்

179
Ricky Ponting

அமெரிக்காவின் மேஜர் லீக் T20 தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் ஒன்றான வோஷிங்டன் ப்ரீடம் (Washington Freedom) அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்டவீரருமான ரிக்கி பொண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

>> “நிராகரிப்புகள் எனக்கு ஒரு வகையான உந்துதலை கொடுக்கிறது” – சமரி

வோஷிங்டன் ப்ரீடம் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஏற்கனவே காணப்பட்டிருந்த அவுஸ்திரேலிய பயிற்சியாளர் கிரேக் சிப்பேர்ட் குறித்த பதவியில் இருந்து விலகியதனை அடுத்தே ரிக்கி பொண்டிங்கிற்கு புதிய பயிற்சியாளருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது 

வோஷிங்டன் ப்ரீடம் அணியின் பயிற்சியாளர்கள் குழாத்தில் ஏற்கனவே டேல் ஸ்டெய்ன் மற்றும் மைக்கல் கிளிங்கர் ஆகியோர் காணப்படும் நிலையில் இவர்களுடன் இணைந்து ரிக்கி பொண்டிங் பணியாற்றவிருப்பதும் குறிப்பிடத்தக்கது 

>> துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மே.தீவுகள் வீரர்

இதேவேளை தான் பயிற்சியாளராக மாறிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரிக்கி பொண்டிங் கிரிக்கெட் வளர்ச்சி அடைந்து வரும் அமெரிக்க மண்ணில் தான் பயிற்சியாளராக செயற்படவிருப்பது சந்தோசம் தருவதாக குறிப்பிட்டிருந்தார். அதேவேளை 2024ஆம் ஆண்டுக்கான மேஜர் லீக் தொடர் ஜூலை மாதம் 04ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<