பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர்

185

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) புதிய தலைவராக செவ்வாய்க்கிழமை (06) சையத் மொஹ்சின் ரசா நக்வி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மே.தீவுகள் வீரர்

அந்தவகையில் புதிய தலைவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக செயற்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் தற்காலிக முதல்வராக செயற்பட்டு வருகின்ற இந்த மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவருக்காக ஒழுங்கு செய்திருந்த சுயாதீன தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தற்காலிக தலைவராக செயற்பட்டு வந்த ஸக்கா அஷ்ரப் கடந்த மாதம் 19ஆம் திகதி தனது பொறுப்பில் இருந்து விலகியதனை அடுத்து தலைவர் ஒருவர் விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையிலையே மொஹ்சின் நக்வியின் நியமனம் இடம்பெற்றிருக்கின்றது.

இதேவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 37ஆவது தலைவராக மாறியிருக்கும் நக்வியின் நியமனம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டிருந்த போது தனக்கு கிடைத்த புதிய பதவி மூலம் தான் பெருமை கொள்வதாக தெரிவித்திருந்தார்.

அதேவேளை உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவத்தினைக் கொண்டிருக்கும் மொஹ்சின் நக்வி, 24 News என்னும் பெயரிலான மிகப் பிரபல்யமிக்க செய்திச் சேவையினை பாகிஸ்தானில் நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<