அமெரிக்காவின் உயரம் பாய்தல் சம்பியனாகிய உஷான்

223

அமெரிக்காவில் நடைபெற்ற Charlie Thomas Invitational உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர மெய்வல்லுனர் வீரர் உஷான் திவங்க பெரேரா உயரம் பாய்தல் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள A&M பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த போட்டியில் களமிறங்கிய உஷான் பெரேரா, ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 2.20 மீட்டர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பிடித்ததுடன், புதிய Facility சாதனையையும் படைத்தார்.

இந்த ஆண்டில் உஷான் பங்கேற்ற முதலாவது போட்டித் தொடர் இதுவாகும்.

அமெரிக்காவில் உயர் கல்வியுடன் மெய்வல்லுனர் விளையாட்டுக்கான பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்ற 26 வயதான உஷான் திவங்க, கடந்த 2021ஆம் ஆண்டு ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.30 மீட்டர் உயரத்தைப் பதிவுசெய்து இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கடந்த 2022ஆம் ஆண்டு 2.27 மீட்டர் உயரத்தை தாவி உள்ளக உயரம் பாய்தலில் இலங்கை சாதனையையும் அவர் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<