Home Tamil முதல் நாளில் சகலதுறைகளிலும் வலுப் பெற்ற இலங்கை அணி

முதல் நாளில் சகலதுறைகளிலும் வலுப் பெற்ற இலங்கை அணி

216

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்ககெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் இலங்கை கிரிக்கெட் அணியானது துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டுள்ளது.

>>இந்தியாவை வீழ்த்த புதுமுக வீரரை களமிறக்கும் இங்கிலாந்து

முன்னதாக கொழும்பு மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தது. இப்போட்டிக்கான இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளரான சாமிக்க குணசேகரவிற்கு அறிமுகம் வழங்கஇ இது இலங்கையின் புதிய டெஸ்ட் தலைவர் தனன்ஞய டி சில்வா இலங்கையை வழிநடாத்தும் முதல் டெஸ்ட் போட்டியாகவும் அமைந்திருந்தது.

இலங்கைபதினொருவர்

திமுத்கருணாரட்ன, நிஷான்மதுஷ்க, குசல்மெண்டிஸ், அஞ்செலோமெதிவ்ஸ், தினேஷ்சந்திமால், தனன்ஞயடிசில்வா (தலைவர்), சதீரசமரவிக்ரம, சாமிக்ககுணசேகர, பிரபாத்ஜயசூரிய, விஷ்வபெர்னாண்டோ, அசிதபெர்னாண்டோ

ஆப்கானிஸ்தான்பதினொருவர்

இப்ராஹிம்சத்ரான், நூர்அலிசத்ரான், றஹ்மட்சாஹ், ஹஷ்மத்துல்லாசஹிதி (தலைவர்), நசீர்ஜமால், இக்ராம்அலிகில், கைஸ்அஹ்மட், ஷியாஉர்ரஹ்மான், மொஹமட்சலீம்சாபி, நவீட்சத்ரான், நிஜாட்மசூட்

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய தமது துடுப்பாட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அசித்த பெர்னாண்டோ தனது பந்துவீச்சு மூலம் நெருக்கடி உருவாக்கினார். இதனால் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த இப்ராகிம் சத்ரானின் விக்கெட் அவர் ஓட்டமேதுமின்றிய நிலையில் பறிபோனது.

இதன் பின்னர் தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்த ஆப்கான் அணிக்கு றஹ்மத் சாஹ் பொறுமையான ஆட்டத்துடன் பலம் சேர்க்கத் தொடங்கினார். அவரின் ஆட்ட உதவியோடு ஆப்கான் அணியானது முதல் நாளின் மதிய போசணத்தினை வெற்றிகரமாக கடந்தது.

எனினும் முதல் நாளின் மதிய போசணத்தினை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் ஆப்கான் அணிக்கு விஷ்வ பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் நெருக்கடி உருவாக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த ஆப்கான் அணியானது முதல் நாள் தேநீர் இடைவேளையினை அடுத்து 62.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 198 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸ்காக எடுத்தது.

ஆப்கான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் றஹ்மத் சாஹ் 13 பௌண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்கள் பெற்றதோடு அது அவரது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களாக மாறியது. இலங்கை அணியின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அசித்த பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>‘எனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன்’ – ரிஷப் பண்ட்

பின்னர் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்ததோடு இலங்கை அணி முதல் நாள் ஆட்டநிறைவில் 14 ஓவர்களுக்கு 80 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி பலமான நிலையில் காணப்படுகின்றது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த திமுத் கருணாரட்ன 42 ஓட்டங்கள் பெற்றிருக்க, நிஷான் மதுஷ்க 36 ஓட்டங்கள் எடுத்திருக்கின்றார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
439/10 (109.2) & 56/0 (7.2)

Afghanistan
198/10 (62.4) & 296/10 (112.3)

Batsmen R B 4s 6s SR
Ibrahim Zadran lbw b Asitha Fernando 0 2 0 0 0.00
Noor Ali Zadran c & b Vishwa Fernando 31 46 5 0 67.39
Rahmat Shah c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 91 139 13 0 65.47
Hashmatullah Shahidi c Sadeera Samarawickrama b Vishwa Fernando 17 45 1 0 37.78
Nasir Jamal b Prabath Jayasuriya 0 7 0 0 0.00
Ikram Alikhil c Nuwanidu Fernando b Vishwa Fernando 21 50 3 0 42.00
Qais Ahmed lbw b Prabath Jayasuriya 21 44 1 1 47.73
Zia-ur-Rehman lbw b Vishwa Fernando 4 11 1 0 36.36
Nijat Masood c & b Asitha Fernando 12 24 1 1 50.00
Naveed Zadran  not out 0 6 0 0 0.00
Mohammad Saleem b Asitha Fernando 0 2 0 0 0.00


Extras 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total 198/10 (62.4 Overs, RR: 3.16)
Bowling O M R W Econ
Asitha Fernando 14.4 1 24 3 1.67
Vishwa Fernando 12 1 51 4 4.25
Chamika Gunasekara 9 1 50 0 5.56
Prabath Jayasuriya 25 7 67 3 2.68
Dhananjaya de Silva 2 0 6 0 3.00
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Noor Ali Zadran b Naveed Zadran  37 53 6 0 69.81
Dimuth Karunaratne c Ibrahim Zadran b Qais Ahmed 77 72 12 0 106.94
Kusal Mendis c Zia-ur-Rehman b Nijat Masood 10 22 1 0 45.45
Angelo Mathews hit-wicket b Qais Ahmed 141 259 14 3 54.44
Dinesh Chandimal c Ikram Alikhil b Naveed Zadran  107 181 10 1 59.12
Dhananjaya de Silva run out (Hashmatullah Shahidi) 0 1 0 0 0.00
Sadeera Samarawickrama c Rahmat Shah b Naveed Zadran  27 33 4 1 81.82
Chamika Gunasekara retired 16 27 2 0 59.26
Prabath Jayasuriya b Naveed Zadran  2 8 0 0 25.00
Vishwa Fernando not out 0 2 0 0 0.00
Asitha Fernando b Nijat Masood 0 1 0 0 0.00


Extras 22 (b 5 , lb 9 , nb 3, w 5, pen 0)
Total 439/10 (109.2 Overs, RR: 4.02)
Bowling O M R W Econ
Nijat Masood 19.2 3 76 2 3.96
Mohammad Saleem 12.1 0 57 0 4.71
Naveed Zadran  22.5 4 83 4 3.69
Zia-ur-Rehman 28 2 90 0 3.21
Qais Ahmed 22 2 98 2 4.45
Rahmat Shah 3 0 10 0 3.33
Hashmatullah Shahidi 2 0 11 0 5.50
Batsmen R B 4s 6s SR
Ibrahim Zadran b Prabath Jayasuriya 114 259 12 0 44.02
Noor Ali Zadran lbw b Asitha Fernando 47 136 5 0 34.56
Rahmat Shah c Sadeera Samarawickrama b Kasun Rajitha 54 119 5 0 45.38
Hashmatullah Shahidi c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 18 37 3 0 48.65
Nasir Jamal not out 41 67 5 1 61.19
Ikram Alikhil c Kusal Mendis b Asitha Fernando 1 6 0 0 16.67
Qais Ahmed c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 1 3 0 0 33.33
Zia-ur-Rehman b Prabath Jayasuriya 0 11 0 0 0.00
Naveed Zadran  b Prabath Jayasuriya 4 14 1 0 28.57
Nijat Masood c Sadeera Samarawickrama b Kasun Rajitha 0 0 0 0 0.00
Mohammad Saleem c Dhananjaya de Silva b Asitha Fernando 2 9 0 0 22.22


Extras 14 (b 1 , lb 6 , nb 1, w 6, pen 0)
Total 296/10 (112.3 Overs, RR: 2.63)
Bowling O M R W Econ
Vishwa Fernando 14 3 37 0 2.64
Asitha Fernando 21.3 2 63 3 2.96
Kasun Rajitha 20 5 59 2 2.95
Prabath Jayasuriya 47 10 107 5 2.28
Dhananjaya de Silva 10 1 23 0 2.30


Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne not out 32 22 3 1 145.45
Nishan Madushka not out 22 23 4 0 95.65


Extras 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 56/0 (7.2 Overs, RR: 7.64)
Bowling O M R W Econ
Zia-ur-Rehman 3 0 12 0 4.00
Naveed Zadran  3 0 30 0 10.00
Nijat Masood 1 0 5 0 5.00
Qais Ahmed 0.2 0 8 0 40.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<