சுகவீனமுற்ற இந்திய அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்

162

இந்திய கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான மயான்க் அகர்வாலிற்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபர் சிக்ஸ் சுற்றில் மே.இ.தீவுகளுடன் போராடி தோல்வியடைந்த இலங்கை இளம் அணி

மயான்க் அகர்வால் தற்போது இந்தியாவின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிண்ணத் தொடரில் கர்நாடக அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் விமானப் பயணம் ஒன்றை மேற்கொண்ட போது மயான்க் அகர்வால் சுகவீனமுற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு அவர் அகர்தலா என்னும் இடத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் மயான்க் அகர்வாலின் உடல்நிலை குறித்து மேலதிகமாக கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் அவர் தற்போது தேறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மயான்க் அகர்வால் பெங்களூர் திரும்பிய பின்னர் வைத்தியர்களின் ஆலோசனையை பெற்ற பின்னர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<