ILT20 தொடரிலிருந்து விலகும் ஷெமார் ஜோசப்!

ILT20 2024

218

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ILT20 தொடரிலிருந்து மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் ஷெமார் ஜோசப் விலகியுள்ளார். 

ஷெமார் ஜோசப் ILT20 தொடரின் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். 

விதிமுறையை மீறிய பும்ராவிற்கு ஐசிசி வழங்கிய தண்டணை

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிச்சல் ஸ்டார்க் வீசிய யோர்க்கர் பந்து ஒன்று ஷெமார் ஜோசப்பின் கால் பெருவிரல் பகுதியை தாக்கியது. எனினும் இந்த உபாதையுடன் துடுப்பெடுத்தாடியிருந்தார். அதுமாத்திரமின்றி குறித்த காயத்துடன் பந்துவீசி 7 விக்கெட்டுகளை சாய்த்து, அவுஸ்திரேலிய மண்ணில் 27 வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் போட்டியொன்றை வெல்வதற்கு காரணமாக மாறியிருந்தார். 

இந்தநிலையில் இவருடைய கால் பெருவிரல் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இவரால் ILT20 தொடரில் விளையாட முடியாது என அறிவக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டுச்சென்று சிகிச்சைப்பெறவுள்ளதுடன், அடுத்து பாகிஸ்தானில் நடைபெறவுள்ள PSL தொடரில் விளையாடுவதற்கு இவர் தயாராகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஷெமார் ஜோசப் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இவர், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் குவிப்பு அடங்கலாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<