இலங்கை கிரிக்கெட் மீதான ICC இன் உறுப்புரிமை தடை நீக்கம்

137

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இலங்கை கிரிக்கெட் மீது விதித்திருந்த உறுப்புரிமை தடையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் பெற்ற இந்திய வீரர்

கடந்த நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு சர்வதேச கிரிக்கெட் வாரியமானது இலங்கை கிரிக்கெட்டுக்கு தற்காலிக உறுப்புரிமை தடை ஒன்றை வழங்கியதோடு, இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கும் நிதிகளையும் மட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்ட தடை தொடர்பில் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ICC குறித்த தடையானது உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ICC வெளியிட்ட ஊடக அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் கடந்த நவம்பர் மாதம் உறுப்பினராக விதிமுறைகளை மீறியதன் அடிப்படையில் தடையினைப் பெற்றதாகவும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் இருந்ததனால் தடையை பெற்றதாகவும் தற்போது நிலைமைகள் திருப்தி தருவதன் காரணமாக தடை நீக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு உறுப்புரிமை தடை விதிக்கப்பட்ட போதிலும் தடைக்காலத்தில் அணியின் வீரர்களோ, வீராங்கனைகளோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  பங்கெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<