ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளரான ரஷீட் கான் பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) T20 தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பார்வைக்கோளாறுக்கு மத்தியிலும் சகீப்பிற்கு கிரிக்கெட் விளையாட அனுமதி
ரஷீட் கான் லாஹூர் கலந்தர்ஸ் அணிக்காக கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான PSL பருவங்களில் விளையாடியிருந்தார். இந்த இரண்டு பருவங்களிலும் லாஹூர் கலந்தர்ஸ் அணியானது PSL சம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில் 2024ஆம் ஆண்டின் புதிய பருவத்திற்காக ரஷீட் கான் அதிக சம்பளத் தொகைக்கு லாஹூர் கலந்தர்ஸ் அணி மூலம் தக்க வைக்கப்பட்டிருந்தார்.
விடயங்கள் இவ்வாறிருக்க கடந்த நவம்பர் மாதம் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுத்த ரஷீட் கான் அவர் இந்த சத்திர சிகிச்சையில் இருந்து மீளக் குணமாகும் பொருட்டே பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷீட் கான் இல்லாத நிலையில் லாஹூர் கலந்தர்ஸ் அணியானது அவரின் பிரதியீட்டு வீரர் தொடர்பில் மிக விரைவில் அறிவிக்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. ரஷீட் கான் இம்மாதம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற T20 தொடரில் உள்வாங்கப்பட்டிருந்த போதும் அவரினால் பூரண உடற்தகுதி இல்லாத காரணத்தினால் தொடரில் விளையாட முடியாத நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அவர் பிக் பேஷ் லீக், SA20 லீக் தொடர் போன்றவற்றிலும் இதே காரணங்களை காட்டி விலகியிருந்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அதிரடி வெற்றிகளுடன் முன்னேறும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி
அதேவேளை ரஷீட் கான் அயர்லாந்துக்கு எதிராக பெப்ரவரி மாத இறுதியில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் 2024ஆம் ஆண்டு பருவத்திற்கான போட்டிகள் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி தொடக்கம் மார்ச் 18ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<