இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரை மார்ச் 22ம் திகதி முதல் மே 26ம் திகதிவரை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 17ம் திகதி நிறைவுபெறவுள்ளதுடன், குறித்த தொடர் நிறைவடைந்து 5 நாட்களில் IPL தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய டெஸ்ட் தொடரில் முக்கிய வீரரை இழக்கும் இங்கிலாந்து
அதுமாத்திரமின்றி IPL தொடர் நிறைவடைந்த 5 நாட்களில் மேற்கிந்திய தீவுகளில் ஆடவருக்கான T20 உலகக்கிண்ணம் ஆரம்பமாகின்றது.
IPL தொடர் நடைபெறும் காலப்பகுதியில் இந்தியாவில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கான திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே தேர்தல் காலப்போட்டிகளை வேறு நாடுகளில் நடத்துவதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.
எனினும் இந்தியாவின் அனைத்து கிரிக்கெட் சங்கங்களும் IPL போட்டிகளை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் நடத்த முடியும் என இந்திய கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்தியாவில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், IPL தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<