பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தலைவராக செயற்பட்டு வந்த ஸகா அஷ்ரப் தனது பதவியில் இருந்து இராஜினமா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் ஜொன்டி ரோட்ஸ், பரத்
நேற்று (19) லாஹூரில் நடைபெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முகாமைத்துவக் குழு கூட்டத்தின் போதே ஸகா அஷ்ரப் தனது பதவியில் இருந்து விலகியதாக கூறப்பட்டிருக்கின்றது.
ஸகா அஷ்ரப் முன்னதாக 2011-13 வரையிலான காலப்பகுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவராக செயற்பட்டிருந்தததோடு, அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் நஜாத் சேத்தியை தொடர்ந்து மீண்டும் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
>> இலகுவான வெற்றியுடன் தொடரை 2-1 என கைப்பற்றியது இலங்கை!
ஸகா அஷ்ரப் பதவியில் இருந்து விலகுவதற்கு அவரது கல்வித் தகுதி காரணமாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அத்துடன் அவரது பதவிக்காலம் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைவதும் மற்றுமொரு காரணமாகும்.
இதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர் ஒருவர் காலக்கிரமத்தில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<