தேசிய கிரிக்கெட் அகடமியில் பதவியை துறந்த மிக்கி ஆர்தர்

220

கிரிக்கெட் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் பாகிஸ்தானின் லாஹுரில் அமைந்திருக்கும் தேசிய கிரிக்கெட் அகடமியில் (NCA) தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

>> இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் ஜொன்டி ரோட்ஸ், பரத்

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மிக்கி ஆர்தர், கிராண்ட் ப்ரட்பேர்ன் மற்றும் அன்ட்ரூ புட்டிக் ஆகியோர் பாகிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அகடமியில் வெவ்வேறு முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த மூவரும் ஜனவரி மாத நிறைவுடன் தங்கள் பொறுப்புக்களில் இருந்து விலகவிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையிலையே இவர்களின் ராஜினமா தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் தேசிய கிரிக்கெட் அகடமியில் இணைவதற்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனராக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பொறுப்பில் தற்போது மொஹமட் ஹபீஸ் செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அதேநேரம் இந்த மூவரும் தங்களது பொறுப்புக்களில் இருந்து விலகியிருக்கும் விடயமானது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மூலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<