ஐசிசி தரவரிசையில் முன்னேறிய தீக்ஷன, ஹஸரங்க!

ICC Rankings

425

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) புதிதாக வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வனிந்து ஹஸரங்க சாய்த்திருந்தார். இது இவருடைய சிறந்த பந்துவீச்சு பிரதியாகவும், ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் வீசப்பட்ட மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியாகவும் பதிவாகியது. 

பங்களாதேஷ் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி

இதன் காரணமாக ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் வரிசையில் 28 இடங்கள் முன்னேறி 40வது இடத்தை ஹஸரங்க பிடித்துக்கொண்டதுடன், ஒருநாள் சகலதுறை வீரர்கள் வரிசையில் 15 இடங்கள் முன்னேறி 17வது இடத்தையும் பிடித்துக்கொண்டார். 

மஹீஷ் தீக்ஷனவை பொருத்தவரை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவர் மூன்று இடங்கள் முன்னேறி ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமட் நபியுடன் 8வது இடத்தை (இருவரும் 648 புள்ளிகள்) பகிர்ந்துக்கொண்டுள்ளார். 

அதேநேரம் வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் T20I பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் முன்னேற்றமடைந்துள்ளனர். இந்திய வீரர் ரவி பிஸ்னோய் தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், ஹஸரங்க ஒரு இடம் முன்னேறியும், மஹீஷ் தீக்ஷன இரண்டு இடங்கள் முன்னேறியும் மூன்றாவது இடத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<