Home Tamil மெதிவ்ஸ், ஷானகவின் அபார ஆட்டங்களுடன் இலங்கைக்கு திரில் வெற்றி

மெதிவ்ஸ், ஷானகவின் அபார ஆட்டங்களுடன் இலங்கைக்கு திரில் வெற்றி

Zimbabwe tour of Sri Lanka 2024

1009
Zimbabwe tour of Sri Lanka 2024

சுற்றுலா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தசுன் ஷானகவின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுள்ளது.

>>முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய குழாம் அறிவிப்பு

கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில், 2021ம் ஆண்டுக்கு பின்னர் அஞ்செலோ மெதிவ்ஸ் அணிக்குள் இணைக்கப்பட்டதுடன், வனிந்து ஹஸரங்கவின் தலைமையில் இலங்கை அணி முதல் போட்டியில் களமிறங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை அணி பந்துவீச்சில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியது. நுவான் துஷார மாத்திரம் சற்று ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்த (43 ஓட்டங்கள்) நிலையில், ஏனைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.

இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் ஷானக, வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, நுவான் துஷார

ஜிம்பாப்வே அணியை பொருத்தவரை அணியின் தலைவர் சிக்கண்டர் ராஷா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தார். ஆரம்பத்தில் டினாஷே கமுனுக்கம்வே 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சிக்கண்டர் ராஷா 42 பந்துகளில் 62 ஓட்டங்களை விளாசினார்.

இவர்கள் இருவரின் துடுப்பாட்ட பிரகாசிப்புகளின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், வனிந்து ஹஸரங்க 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. குசல் மெண்டிஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் தலா 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ஆட்டமிழந்தனர். அதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழத்தொடங்கின.

இலங்கை அணி ஏழாவது ஓவரின் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ஓட்டங்களை கடந்திருந்த போதும், அதனைத்தொடர்ந்து 83 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதுமாத்திரமின்றி கடைசி 3 ஓவர்களில் 37 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

இறுதி துடுப்பாட்ட ஜோடிகளாக களத்திலிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தசுன் ஷானக ஆகியோர் மிகச்சிறந்த துடுப்பாட்டங்களை வெளிப்படுத்தினர். அபாரமாக ஆடிய தசுன் ஷானக 18 பந்துகளில் 26 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 38 பந்துகளில் 46 ஓட்டங்களையும் விளாசி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்செல்ல, துஷ்மந்த சமீர கடைசி 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஒரு பௌண்டரி மற்றும் இரண்டு ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பந்துவீச்சில் சிக்கண்டர் ராஷா அற்புதமாக செயற்பட்டு 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்து இலங்கைக்கு நெருக்கடி கொடுத்திருந்தார்.

முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Sri Lanka
144/7 (20)

Zimbabwe
143/5 (20)

Batsmen R B 4s 6s SR
Tinashe Kamunhukamwe c Dushmantha Chameera b Maheesh Theekshana 26 18 1 2 144.44
Craig Ervine lbw b Maheesh Theekshana 10 16 2 0 62.50
Sean Williams c Sadeera Samarawickrama b Wanidu Hasaranga 14 20 0 0 70.00
Sikandar Raza c Dasun Shanaka b Dushmantha Chameera 62 42 5 2 147.62
Ryan Burl b Wanidu Hasaranga 5 9 0 0 55.56
Brian Mudzinganyama not out 10 8 0 1 125.00
Luke Jongwe not out 13 8 0 2 162.50


Extras 3 (b 0 , lb 1 , nb 1, w 1, pen 0)
Total 143/5 (20 Overs, RR: 7.15)
Bowling O M R W Econ
Angelo Mathews 3 0 13 0 4.33
Nuwan Thushara 3 0 46 0 15.33
Mahesh Theekshana 4 0 16 2 4.00
Dushmantha Chameera 4 0 38 1 9.50
Wanidu Hasaranga 4 0 19 2 4.75
Dasun Shanaka 2 0 13 0 6.50


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Wellington Masakadza b Richard Ngarava 2 3 0 0 66.67
Kusal Mendis c Wellington Masakadza b Blessing Muzarabani 17 15 2 0 113.33
Kusal Perera c Ryan Burl b Wellington Masakadza 17 13 3 0 130.77
Sadeera Samarawickrama b Sikandar Raza 9 7 1 0 128.57
Charith Asalanka c Wellington Masakadza b Sikandar Raza 16 22 1 0 72.73
Angelo Mathews c Wellington Masakadza b Blessing Muzarabani 46 38 5 1 121.05
Wanidu Hasaranga b Sikandar Raza 0 2 0 0 0.00
Dasun Shanaka not out 26 16 4 0 162.50
Dushmantha Chameera not out 6 2 1 0 300.00


Extras 5 (b 0 , lb 1 , nb 0, w 4, pen 0)
Total 144/7 (20 Overs, RR: 7.2)
Bowling O M R W Econ
Richard Ngarava 4 0 34 1 8.50
Blessing Muzarabani 4 0 33 2 8.25
Luke Jongwe 3 0 38 0 12.67
Wellington Masakadza 4 0 21 1 5.25
Sikandar Raza 4 0 13 3 3.25
Sean Williams 1 0 4 0 4.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<