Home Tamil ஹஸரங்கவின் அசத்தல் மீள்வருகையுடன் இலங்கைக்கு தொடர் வெற்றி

ஹஸரங்கவின் அசத்தல் மீள்வருகையுடன் இலங்கைக்கு தொடர் வெற்றி

Zimbabwe tour of Sri Lanka 2024

455

இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்கவின் அபாரமான பந்துவீச்சு வருகையுடன் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்ததுடன், மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது.

>>இளையோர் உலகக் கிண்ண நடுவர் குழாத்தில் இலங்கையர்

டினாஷே கமுன்ஹுகாம்வே, தபிவா முபுட்சா மற்றும் பராஸ் அக்ரம் ஆகியோருக்கு பதிலாக வெலிங்டன் மசகட்ஷா, லுக் ஜொங்வே மற்றும் டகுத்ஸ்வனாஷே கைடானோ ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். இலங்கை அணியில் தசுன் ஷானக மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோருக்கு பதிலாக ஷெவோன் டேனியல் ஒருநாள் அறிமுகத்தை பெற்றுக்கொண்டதுடன், வனிந்து ஹஸரங்க உபாதையிலிருந்து அணிக்கு திரும்பினார்.

பந்துவீச ஆரம்பித்த இலங்கை அணி முதல் ஓவர்களில் ஓட்டங்களை விட்டுக்கொடுக்க தொடங்கியிருந்தது. முதல் விக்கெட்டுக்காக ஜிம்பாப்வே அணி 40 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போதும் ஆட்டத்தில் மழைக்குறுக்கிட தொடங்கியது. பின்னர் 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்து ஆட்டம் ஆரம்பமாக வனிந்து ஹஸரங்க பந்துவீச ஆரம்பித்தார்.

வனிந்து ஹஸரங்க முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்த 43 ஓட்டங்களுக்கு ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்ததுடன், மீண்டும் போட்டியில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் ஆட்டம் மழையால் தடைப்பட்ட நிலையில் அணிக்கு 27 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.

மழையால் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் வனிந்து ஹஸரங்க அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே அணிக்கு தடுமாற்றத்தை கொடுத்தார். இவர் மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்த ஒட்டுமொத்தமாக 5.5 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக கடந்த ஆண்டு 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இவர், இன்றைய தினம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னுடைய அதிசிறந்த பந்துவீச்சு பிரதியையும் பதிவுசெய்தார்.

இதன்காரணமாக 22.5 ஓவர்கள் நிறைவில் 96 ஓட்டங்களுக்கு ஜிம்பாப்வே அணி சகல விக்கடெ்டுகளையும் இழந்ததுடன், வனிந்து ஹஸரங்கவை தவிர்த்து டில்சான் மதுசங்க, ஜனித் லியனகே மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

>>ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை T20i குழாம் அறிவிப்பு

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு மீண்டும் ஒருமுறை ஓட்டங்களை பெற்றுக்கொடுக்காமல் வெளியேறி அவிஷ்க பெர்னாண்டோ ஏமாற்றமளித்திருந்தார். எனினும் அணித்தலைவர் குசல் மெண்டிஸ் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆட மறுமுனையில் அறிமுக வீரர் ஷெவோன் டேனியல் தடுமாறியிருந்தாலும் சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றை வழங்கி 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் குசல் மெண்டிஸ் தலைவராக தன்னுடைய முதல் அரைச்சதத்தை பதிவுசெய்து 66 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்ல, 16.4 ஒவர்கள் நிறைவில் அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில்  டக்வர்த் லூவிஸ் முறைப்படி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 2-0 என வெற்றிக்கொண்டதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20i தொடர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது.

Result


Sri Lanka
97/2 (16.4)

Zimbabwe
96/10 (22.5)

Batsmen R B 4s 6s SR
Joylord Gumbie lbw b Wanidu Hasaranga 29 34 4 0 85.29
Takudzwanashe Kaitano c Dilshan Madushanka b Wanidu Hasaranga 17 24 1 0 70.83
Craig Ervine lbw b Wanidu Hasaranga 0 6 0 0 0.00
Milton Shumba lbw b Wanidu Hasaranga 2 9 0 0 22.22
Sikandar Raza st Kusal Mendis b Maheesh Theekshana 10 11 1 0 90.91
Ryan Burl b Janith Liyanage  9 13 1 0 69.23
Clive Madande b Wanidu Hasaranga 0 1 0 0 0.00
Luke Jongwe c Kusal Mendis b Dilshan Madushanka 14 17 1 1 82.35
Wellington Masakadza c Dushmantha Chameera b Wanidu Hasaranga 11 20 0 0 55.00
Richard Ngarava not out 2 2 0 0 100.00
Blessing Muzarabani lbw b Wanidu Hasaranga 0 1 0 0 0.00


Extras 2 (b 0 , lb 0 , nb 1, w 1, pen 0)
Total 96/10 (22.5 Overs, RR: 4.2)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 5 0 31 1 6.20
Maheesh Theekshana 5 1 15 1 3.00
Dushmantha Chameera 4 0 14 0 3.50
Janith Liyanage  3 1 17 1 5.67
Wanidu Hasaranga 5.5 1 19 7 3.45


Batsmen R B 4s 6s SR
Shevon Daniel c Milton Shumba b Wellington Masakadza 12 28 1 0 42.86
Avishka Fernando c Joylord Gumbie b Richard Ngarava 0 4 0 0 0.00
Kusal Mendis not out 66 51 9 1 129.41
Sadeera Samarawickrama not out 14 17 1 0 82.35


Extras 5 (b 0 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total 97/2 (16.4 Overs, RR: 5.82)
Bowling O M R W Econ
Richard Ngarava 3 0 20 1 6.67
Blessing Muzarabani 6 0 38 0 6.33
Sikandar Raza 3 0 12 0 4.00
Wellington Masakadza 2.4 0 15 1 6.25
Luke Jongwe 2 0 10 0 5.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<