பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ள குணதிலக்க

Bangladesh Premier League 2024

230

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடருக்காக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

தனுஷ்க குணதிலக்கவை டர்டெண்டோ டாக்கா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த லசித் குரூஸ்புள்ளே இணைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது வீரராக தனுஷ்க குணதிலக்க இடம்பிடித்துள்ளார். 

இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

தனுஷ்க குணதிலக்க இறுதியாக 2022ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார். 

குறித்த தொடரின் பின்னர் பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக அவுஸ்திரேலியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்டார். 

தற்போது தனுஷ்க குணதிலக்க மேஜர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் கொழும்பு எஸ்.எஸ்.சி கழகத்துக்காக விளையாடி வருகின்றார். இதில் கடைசியாக நடைபெற்ற இராணுவ கழகத்துக்கு எதிரான போட்டியில் 41 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். 

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் இம்மாதம் 19ம் திகதி முதல் அடுத்த மாதம் 27ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<