மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடருக்கான குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமான தி டெலிகிராம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தில் ஒட்டுமொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், முதல் சுற்றில் 20 அணிகள் 4 குழுக்களாக வகுக்கப்பட்டுள்ளன.
>> பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ள குழுக்களின் அடிப்படையில் இலங்கை அணி குழு D இல் இடம்பெற்றுள்ளது. இலங்கை, தென்னாபிரிக்கா, நெதர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளன.
ஒரு குழவில் ஐந்து அணிகள் உள்வாங்கப்படும் என்பதுடன், அடுத்ததாக சுபர் 8 சுற்று நடைபெறும். இதில் குழுக்களில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுபர் 8 சுற்றில் மோதும்.
கடந்த காலங்களில் குழுநிலையில் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த குழுவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணியை எதிர்கொள்ளும் வகையில் போட்டி அட்டவணைகள் அமைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் இம்முறை குழுநிலை இடங்களை தவிர்த்து T20 தரவரிசையின்படி சுபர் 8 சுற்றுக்கான அணிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இங்கிலாந்து அணி குழு B இல் முதல் இரு இடங்களில் ஒரு இடத்தை பிடித்தால், B1 அணியாக கருதப்பட்டு, சுபர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ளும்.
இதேவேளை கீழே காட்டப்பட்டுள்ள சுபர் 8 அட்டவணையின் படி அவுஸ்திரேலிய அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி சுபர் 8 சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் அவுஸ்திரேலியாவின் B2 இடத்தை பிடித்து சுபர் 8 சுற்றில் போட்டியிடும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றுக்கான குழுக்கள்
குழு A | குழு B | குழு C | குழு D |
இந்தியா | இங்கிலாந்து | நியூசிலாந்து | தென்னாபிரிக்கா |
பாகிஸ்தான் | அவுஸ்திரேலியா | மே.தீவுகள் | இலங்கை |
அயர்லாந்து | நமீபியா | ஆப்கானிஸ்தான் | பங்களாதேஷ் |
கனடா | ஸ்கொட்லாந்து | உகண்டா | நெதர்லாந்து |
அமெரிக்கா | ஓமான் | பப்புவா நியூகினியா | நேபாளம் |
இரண்டாவது சுற்றுக்கான குழுக்கம்
Group 1 – USA | Group 2 – Caribbean |
A1 – இந்தியா | A2 – பாகிஸ்தான் |
B2 – அவுஸ்திரேலியா | B1 – இங்கிலாந்து |
C1 – நியூசிலாந்து | C2 – மே.தீவுகள் |
D2 – இலங்கை | D1 – தென்னாபிரிக்கா |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<