இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே குழாம் அறிவிப்பு

Zimbabwe tour of Sri Lanka 2024

464
Zimbabwe tour of Sri Lanka 2024

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான ஜிம்பாப்வே குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் உபாதை காரணமாக வெளியேறியிருந்த கிரைக் எர்வின் மீண்டும் அணிக்கு திரும்பி ஒருநாள் அணியை வழிநடத்தவுள்ளதுடன், சிக்கண்டர் ரஷா T20i அணியை வழிநடத்தவுள்ளார்.

>>இலங்கை பயிற்றுவிப்பு குழாத்தில் இணையும் கண்டம்பி, சந்தன

ஜிம்பாப்வே அணியை பொருத்தவரை முதற்தர போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திய தபிவா முபுட்ஷா முதன்முறயைாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஜிம்பாப்வே அணிக்காக T20i போட்டிகளில் அறிமுகத்தை பெற்ற வேகப்பந்துவீச்சாளர் பராஷ் அக்ரன் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் அயர்லாந்து தொடரில் இணைக்கப்பட்டிருந்த டகுட்ஷ்வன்ஷே கைடானோ, டினாஷே கமுன்ஹுகம்வே, மில்டன் ஷூம்பா மற்றும் டொனி முன்யோங்கா ஆகியோர் இலங்கை தொடரில் மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 6ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் குழாம் கிரெக் எர்வின் (தலைவர்), பராஸ்அக்ரன், ரயன்பர்ல், ஜாய்லார்ட்கும்பி, லூக்ஜாங்வே, டகுட்ஸ்வானாஷேகைடானோ, டினாஷேகமுன்ஹுகாம்வே, கிளைவ்மடாண்டே, வெலிங்டன்மசகட்சா, தபிவாமுபுட்சா, டோனிமுனயோங்கா, ிளெஸிங்முசரபானி, ரிச்சர்ட் கிராவா, சிக்கண்டர் ரஷா, மில்டன் ஷூம்பா

T20i குழாம் சிக்கண்டர் ஷா (தலைவர்), பிரையன்பென்னட், ரயன்பர்ல், கிரெக் எர்வின், ஜாய்லார்ட்கும்பி, லூக்ஜாங்வே, டினாஷேகமுன்ஹுகாம்வே, கிளைவ்மடாண்டே, வெலிங்டன்மசகட்சா, கார்ல்மும்பா, டோனிமுனயோங்கா, ிளெசிங்முசரபாணி, அய்ன்ஸ்லே ட்லோவு, ரிச்சர்ட் கிராவா, மில்டொன் ஷூம்பா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<