இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையே 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் பங்கேற்கும் இலங்கை வீரர்களின் உத்தேச குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
>> இலங்கை – ஜிம்பாப்வே தொடர்களுக்கான டிக்கட் விபரம் வெளியானது
அதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் உத்தேச குழாம்களில் இலங்கை ஒருநாள் மற்றும் T20I அணிகளுக்கு புதிய தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை ஒருநாள் அணியின் புதிய தலைவராக ஒருநாள் உலகக் கிண்ணத்தின் நடுவே இலங்கையை வழிநடாத்தியிருந்த குசல் மெண்டிஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இதேநேரம் இலங்கை T20I அணியின் தலைவர் பொறுப்பு நட்சத்திர சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்கவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் இலங்கை ஒருநாள் மற்றும் T20I அணிகளின் பிரதி தலைவராக சரித் அசலன்க நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இலங்கையின் ஒருநாள் உத்தேச குழாத்தினை நோக்கும் போது இளம் வீரர்களான நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே மற்றும் சாமிக்க குணசேகர ஆகிய இளம் வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு அனுபவ சுழல்பந்துவீச்சாளர்களான ஜெப்ரி வன்டர்செய் மற்றும் அகில தனன்ஞய ஆகியோர் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர். இதேநேரம் இலங்கை அணியினை ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பிரதிநிதித்துவம் செய்த அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரட்ன, மதீஷ பதிரன, தனன்ஞய டி சில்வா ஆகியோர் ஒருநாள் உத்தேச குழாத்தில் உள்ளடக்கப்படவில்லை.
T20I உத்தேச அணியினை நோக்கும் போது அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ மீண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றார். இதேநேரம் ஒருநாள் உத்தேச குழாத்தில் நீக்கப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோருக்கு உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வாளர்கள் உத்தேச T20I அணியில் வாய்ப்பு வழங்கியிருக்கின்றனர். அதேநேரம்2023ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் – ஒரு மீள்பார்வை அகித தனன்ஞய, ஜெப்ரி வன்டெர்செய் ஆகிய வீரர்களும் T20I குழாத்தில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர்.
>> 2023ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் – ஒரு மீள்பார்வை
இதேநேரம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு, மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் ஒருநாள் தொடரினை அடுத்து ஜனவரி 14ஆம் திகதி ஆரம்பமாகுகின்றது.
இலங்கை ஒருநாள் உத்தேச குழாம்
குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலன்க (பிரதி தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானக்க, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க, துஷ்மன்த சமீர, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுசான், அசித பெர்னாண்டோ, அகில தனன்ஞய, ஜெப்ரி வன்டர்செய், சாமிக்க குணசேகர
இலங்கை T20I உத்தேச குழாம்
வனிந்து ஹஸரங்க (தலைவர்), சரித் அசலன்க (பிரதி தலைவர்), குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, தசுன் ஷானக்க, அஞ்செலோ மெதிவ்ஸ், பானுக்க ராஜபக்ஷ, குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க, துஷ்மன்த சமீர, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுசான், அகில தனன்ஞய, ஜெப்ரி வன்டர்செய், மதீஷ பதிரன, நுவான் துஷார, பினுர பெர்னாண்டோ
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<