ஊக்க மருந்து பாவனையினால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு தடை

275

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களான வெஸ்லி மதவ்வரே மற்றும் பிரன்டன் மவூடா ஆகிய இருவரும் ஊக்க மருந்து பாவனை காரணமாக அந்த நாட்டு கிரிக்கெட் சபை (ZC) மூலம் உடனடி அமுலுக்கு வரும் வகையில் தடையினைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைமை பயிற்றுவிப்பாளரின்றி இலங்கை வரும் ஜிம்பாப்வே!

ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் இரண்டு வீரர்களும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து (Recreational Drug) ஒன்றை உள்ளெடுத்தமை வைத்திய பரிசோதனைகளின் வாயிலாக கண்டு பிடிக்கப்பட்டதனை தொடர்ந்தே தடையினைப் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனவே தடைக்கு உள்ளாகிய இரண்டு வீரர்களும் மறு அறிவித்தல் ஒன்று வரும் வரையில் கிரிக்கெட் போட்டிகளிலோ அல்லது கிரிக்கெட் சார்ந்த ஏனைய நடவடிக்கைகளிலோ பங்கெடுக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது.

அறிமுக போட்டியுடன் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறும் பாகிஸ்தான் வீரர்

தடையினைப் பெற்றிருக்கும் வீரர்களில் மவூடா ஜிம்பாப்வே அணிக்காக இதுவரை 26 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருப்பதோடு, இறுதியாக ஜிம்பாப்வே அயர்லாந்துடன் ஆடிய ஒருநாள் தொடரிலும் பங்கேற்றிருந்தார்.

மறுமுனையில் வெஸ்லி மதவ்வரே ஜிம்பாப்வே அணிக்காக சுமார் 100 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரை விளையாடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>  மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<