பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான குர்ராம் சஹ்சாத் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
>> ஐசிசி தரவரிசையில் இந்திய வீரரை முந்திய ஆதில் ரஷீட்
தற்போது அவுஸ்திரேலியாவில் காணப்படும் பாகிஸ்தான் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. கடந்த வாரம் பேர்த் நகரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அறிமுகம் பெற்ற வேகப்பந்துவீச்சாளரான குர்ராம் சஹ்சாத் பந்துவீச்சின் போது அசௌகரியத்தினை எதிர் கொண்டது அவதானிக்கப்பட்டிருந்தது.
நிலைமைகள் இவ்வாறு காணப்பட வைத்திய பரிசோதனைக்கு முகம் கொடுத்த குர்ராம் சஹ்சாத்திற்கு தற்போது விலா என்பில் உபாதை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சஹ்சாத் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறுகின்றார்.
சஹ்சாத் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் டேவிட் வோனர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுச்சேன் போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுக்களோடு மொத்தமாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தார். இதனால் சஹ்சாத்தின் வெளியேற்றம் பாகிஸ்தான் அணிக்கு பேரிழப்பாக மாறியிருக்கின்றது. இவர் தவிர பாகிஸ்தான் முன்னணி சுழல்பந்துவீச்சாளரான அப்றார் அஹ்மட்டும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகின்றது.
குர்ராம் சஹ்சாத் இல்லாத நிலையில் அவரின் இடத்தினை பாகிஸ்தான் அணியில் மேலதிக வேகப்பந்துவீச்சாளர்களாக காணப்படும் ஹஸன் அலி அல்லது மொஹமட் வஸீம் ஆகிய இருவரில் ஒருவர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>> பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி
பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரரேலியாக 1-0 என முன்னிலை பெற்றிருக்க, பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய பங்கேற்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி 26ஆம் திகதி மெல்பர்ன் நகரில் ஆரம்பமாகின்றது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<