சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய T20I தரவரிசையில் இங்கிலாந்து அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து அணி நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I தொடரை 2-2 என சமப்படுத்தியிருந்தது. இதில் 4 போட்டிகளில் விளையாடிய ஆதில் ரஷீட் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
>>IPL ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கையின் மூன்று வீரர்கள்!
இவ்வாறான நிலையில் இந்திய அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோயை பின்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இரண்டாவது இடத்தை ரஷீட் கான் பிடித்துள்ளதுடன், ரவி பிஸ்னோய் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
மேற்குறித்த மூன்று வீரர்களும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளதுடன், இலங்கை அணியைச் சேர்ந்த வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய T20I துடுப்பாட்ட தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் பங்களாதேஷ் அணியின் சகீப் அல் ஹஸன் முதலிடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<