இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடரின் எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளுக்குமான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>> ILT20 தொடரில் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தான் வீரருக்கு தடை
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கே ஒருநாள் தொடரின் பின்னர் தற்போது 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடி வருகின்றது. இந்த T20I தொடரின் மூன்று போட்டிகள் நிறைவடைந்து மேற்கிந்திய தீவுகள் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய T20I குழாத்தில் சிம்ரோன் ஹெட்மேயர் நீக்கப்பட்டிருப்பதோடு, வேகப்பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசேப்பிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
சிம்ரோன் ஹெட்மேயர் அண்மைய கிரிக்கெட் போட்டிகளில் வெளிப்படுத்தி வரும் மோசமான ஆட்டத்தின் காரணமாகவே மேற்கிந்திய தீவுகளின் T20 குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதோடு, அல்சாரி ஜோசேப்பிற்கு பணிச்சுமை கருதி ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த இரண்டு வீரர்களினதும் பிரதியீடுகளாக முன்வரிசை துடுப்பாட்டவீரரான ஜோன்சன் சார்ள்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஒசானே தோமஸ் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
>> டெஸ்ட் தொடரின் நடுவே பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ள பாகிஸ்தான்
மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் விளையாடும் நான்காவது T20I போட்டி இன்று (19) ட்ரினாடாடில் ஆரம்பமாகவுள்ளதோடு, தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான T20I போட்டி அதே மைதானத்தில் வியாழன் (21) இடம்பெறுகின்றது.
அணிக்குழாம்
ரொவ்மன் பவல் (தலைவர்), சாய் ஹோப், ஜோன்சன் சார்ள்ஸ், ரொஸ்டன் சேஸ், மெதிவ் போர்டே, அகேல் ஹொசைன், பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஸ் மோட்டி, நிகோலஸ் பூரான், அன்ட்ரே ரஸ்ஸல், செர்பானே ருத்தர்போட், ரொமாரியோ செபர்ட், ஒசானே தோமஸ்
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<