இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விலகிய இளம் வீரர்

India Tour of South Africa 2023-24

288
India Tour of South Africa 2023-24

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் இளம் விக்கெட் காப்பாளரான இஷான் கிஷன் விலகியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 T20i,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் சூர்யகுமார் தலைமையில் T20i தொடரில் 1-1 என சமநிலையில் முடிந்தது. தற்போது கே.எல் ராகுல் தலைமையில் 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

அடுத்து ரோஹித் சர்மா தலைமையில் 2 போட்டிகள் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியிலிருந்து இஷான் கிஷன் தன்னை விடுவிக்கும்படி பிசிசிஐ-யிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விடுவிக்குமாறு பிசிசிஐக்கு இஷான் கிஷன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக விக்கெட் காப்பாளர் கே.எஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடி கவனம் பெற்றவர் கே.எஸ். பரத். இவர் இந்தியாவுக்காக 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த மொஹமட் ஷமி உடல்தகுதி பெறாத நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் அணி விபரம்:

ரோஹித் சர்மா (தலைவர்), ஜஸ்ப்ரித் பும்ரா (உதவி தலைவர்), விராட் கோலி, ஷுப்மன் கில், யாஸஷ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல் ராகுல் (விக்கெட் காப்பாளர்), கே.எஸ் பரத் (விக்கெட் காப்பாளர்), ரவிச்சந்திரன் ரஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<