டுபாயில் இம்மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ள 2024ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஏலத்தில் 333 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை IPL ஏலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 333 பேரில் 214 இந்திய வீரர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 2 வீரர்கள் ஐசிசியின் முழு அங்கத்துவம் பெறாத அணிகளிலிருந்து உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்திடம் வீழ்ந்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி
அதேநேரம் இலங்கை அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஏலத்தில் முன்னணி சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க அதிகபட்ச தொகையாக 1.5 கோடி ரூபாவை (இந்திய ரூபாய்) தன்னுடைய ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளார்.
வனிந்து ஹஸரங்கவை தவிர்த்து துஷ்மந்த சமீர, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக, சரித் அசலங்க, டில்ஷான் மதுஷங்க, நுவான் துஷார மற்றும் லஹிரு குமார ஆகியோர் இலங்கை சார்பில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். குறித்த இந்த வீரர்கள் தங்களுடைய ஆரம்ப தொகையாக 50 இலட்சம் ரூபாவை (இந்திய ரூபாய்) நிர்ணயித்துள்ளனர்.
IPL ஏலத்தின் மூலம் இம்முறை மொத்தமாக 77 வீரர்களை இணைக்க முடியும் என்பதுடன், இதில் 30 வெற்றிடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
IPL 2024 ஏலத்தில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்கள்
வீரர் | ஆரம்ப விலை (இந்திய ரூபாய்) |
வனிந்து ஹஸரங்க | 15,000,000 |
குசல் மெண்டிஸ் | 5,000,000 |
தசுன் ஷானக | 5,000,000 |
சரித் அசலங்க | 5,000,000 |
துஷ்மந்த சமீர | 5,000,000 |
டில்ஷான் மதுஷங்க | 5,000,000 |
லஹிரு குமார | 5,000,000 |
நுவான் துஷார | 5,000,000 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<